வாட்ஸ்ஆப்: முன்னணி ஆப்களில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது மெட்டா அதிரடி அப்டேட்களை கொடுத்து கொண்டே வருகின்றனர். அதில் நம்மை வியக்க வைக்கும் அப்டேட்களும், உபயோகமுள்ள அப்டேட்களும் அடங்கும்.
அந்த வரிசையில், தற்போது வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது தான் டயல் வசதி (DIAL). நம் வாட்ஸ்ஆப்பில் அதிகமாக நமது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நாம் வாட்ஸ்ஆப் கால் (Whatsapp Call) செய்து பேசுவதை வழக்கமாகவே கொண்டிருப்போம்.
ஆனால், புதிய நம்பருக்கு வாட்ஸ்ஆப் கால் செய்கிறோம் என்றால் அந்த நம்பரை நாம் நமது போனில் சேவ் (Save) செய்துவிட்டு தான் அவருக்கு வாட்ஸ்ஆப் கால் செய்திருப்போம். இனி அந்த கவலை இல்லை ஏனென்றால் இப்படி டயல் வசதி வாட்ஸ்ஆப் கொண்டு வந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வாட்ஸ்ஆப் தெரிவிக்கவில்லை என்றாலும் இதற்கு நெருக்கமான சில வட்டாரங்கள் மூலம் இந்த தகவலானது தெரியவந்துள்ளது.
தற்போது அழைப்பு மேற்கொள்ள வேண்டுமெனில், அவர் எண்ணை சேமித்த பிறகே DIAL செய்து பேச முடிகிறது அல்லவா அதற்கு மாற்றாகவே, இந்த வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்படுகிறது என தகவலின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…