சூரிய கிரகணம் : இன்று நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தை இதை பயன்படுத்தி நமது கையில் இருக்கும் ஸ்மார்ட் போனின் உதவியோடு பார்க்கலாம்.
சூரிய கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகள் நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது இன்று நடைபெறுகிறது, இந்தக் காட்சி வானில் அவ்வளவு அழகாக இருக்கும் அந்த அழகான காட்சியை நாம் பழைய பிலிம் ரோல், கண்ணாடி போன்றவற்றை உபயோகப்படுத்தி கண்டு ரசித்திருப்போம். நண்பர்களே, இனி அந்த கவலை வேண்டாம் கையில் இருக்கும் உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து கூட இன்று நடக்கப்போகும் சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.
இன்று நடைபெற போகும் இந்த சூரிய கிரகணம் இரவு 9.30 மணிக்கு மேல் நடைபெறும் என்றும் குறைந்தது 4 மணி நேரம் நடக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது. மேலும், இது அமெரிக்காவில் பகல் நேரத்தில் தெளிவாக தெரியும் என்பதால் அங்கு வாழும் மக்களுக்கு அதிர்ஷ்டம் என்றே கூறலாம். உங்கள் கண்களைப் போலவே தான் உங்கள் மொபைல் போனின் கேமராவும் சூரிய கிரகணத்தைப் படம் பிடிக்கும்போது சேதமடையலாம்.
அதனால், உங்கள் லென்ஸில் UV பில்டரை பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எப்படி நாம் நமது சன் கிளாஸைப் பயன்படுத்தி நமது கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்கிறோமோ அதே போல தான் நமது ஸ்மார்ட் போனின் DIY UV ப்ரொடக்டரை உருவாக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா முன் சன் கிளாசை வைத்து படம் பிடிக்கலாம் என்று கூறுகின்றனர். இதனால், வெறும் கண்களால் நாம் பார்ப்பதை தவிர்த்து இது போல ஸ்மார்ட் போன் உதவியுடன் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சூரியன் போன்ற பெரிய இயற்க்கை நிகழ்வுகளை இன்னும் அழகாக படம் பிடிக்க சாதாரண லென்ஸ்ஸில் படம் பிடிப்பதற்கு பதிலாக ஸ்மார்ட் போன் கேமராவோடு டெலிஃபோட்டோ லென்ஸை இனைத்து படம் பிடிக்க வேண்டும் எளிமையாகச் சொன்னால், டெலிஃபோட்டோ லென்ஸைப் பயன்படுத்தினால் நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் பெரிதாகக் காட்டும். இதனால், நடக்கும் சூரிய கிரகணத்தை மிக அருகில் பார்ப்பது போல் நமது போன் திரையில் பார்க்கலாம்.
மேலும், இது போன்ற இயற்க்கை நிகழ்வுகளை அதிலும் குறிப்பாக சூரியகிரகணம் போன்ற நிகழ்வுகளை படம் பிடிக்கும் போது அது ஆடாமல் இருப்பதற்கு ஒரு முக்காலி போன்ற ஒன்றில் நமது போனை ஆடாமல் வைத்து அதில் அந்த டெலிஃபோட்டோ லென்ஸை பொருத்தி இருந்த இடத்தில் இருந்து போன் டிஸ்பிளே மூலமாக பார்க்கலாம். நமது கையால் போனை பிடித்து எடுப்பதை விட இது போன்று முக்காலி பயன்டுத்தினால் அதிர்வுகள் போன்ற எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தெளிவான ஒரு வீடியோ நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…