செல்ஃபி பிரியர்கலுக்கான ஒரு வரப்பிரசாதம்..!!இதோ வந்துவிட்டது ஒப்போ எப்7..!!

Published by
Dinasuvadu desk

 

ஒப்போ நிறுவனம் இன்று அட்டகாசமான அதன் புதிய அம்சமான ஒப்போ எப்7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது,இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது செல்ஃபி பிரியர்களிடம். மேலும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் கொண்ட ஒப்போ எப்7 சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.21,990-ஆக உள்ளது, அதே போல் 6ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.26,990-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது 6.23-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எப்7 நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 5.0 கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ அடிப்படையிலான ஒரு பயனுள்ள மென்பொருளாகும். இதில் ஸ்பிலிட் ஸ்கிரீன், கேம் அக்ஸலரேஷன், க்ளோன் ஆப்ஸ், தீம் ஸ்டோர் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய ஒப்போ எப்7  ஆனது பேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது.

ஒப்போ எப்7 சாதனம் பொதுவாக 64-பிட் 4ஜிபி ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3400எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 25மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ரியல்-டைம் சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த சென்சார் சிறந்த அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0 தொழில்நுட்பம் உள்ளது.

 

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

28 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago