இனி இது இருந்தா போதும்… ஆப்பிளின் வேற லெவல் 3-D ஹெட்செட்… விஷன் ப்ரோ.!

Vision Pro

அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ‘விஷன் ப்ரோ’ஹெட்செட்.

இந்த ஆண்டுக்கான WWDC 2023 நிகழ்வை ஆப்பிள் நிறுவனம் நேற்று நடத்தியது. WWDC-என்பது ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் கூடும் ஒரு நிகழ்வாகும். இங்கு ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளான ஐபோன்கள், ஐபாட்கள், மேக்புக்ஸ், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றிற்கான புதிய OS மற்றும் புதிய அப்டேட்களை அந்த நிறுவனம் அறிவிக்கும் வகையில், இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பான ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) என்று அழைக்கப்படும் Virtual Realty அம்சத்துடன் தாறுமாறான புதிய ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் இந்த ஹெட்செட் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு சந்தைக்கு வருகிறது.

மேலும் விஷன் ப்ரோவில் ஆப்பிளின் முதல் 3-D கேமரா மூலம் புகைப்படம், வீடியோக்களை எடுத்து, அதனை நாம் மறுபடியும் போட்டோ கேலரியில் பார்க்கும் போது புகைப்படம்/வீடியோ எடுக்கப்பட்ட தருணத்தில் நாம் அருகில் இருந்தது போன்ற உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நாம் பார்த்த VR- விர்ச்சுவல் ரியாலிட்டி யை காட்டிலும் விஷன் ப்ரோ அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Apple Vision Pro

Apple Vision Pro [Image Source : Twitter/@Apple]

குறைந்த எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெட்செட்டின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.2.88 லட்சம் ஆகும்.

WWDC 2023-ல் ஆப்பிள் நிறுவனம் அறிவித்த ‘Apple Vision Pro’ சிறப்பம்சம்:

  • விஷன் ப்ரோ எடை குறைவு என்பதால் பேட்டரி பேக்கப் 2மணிநேரம் மட்டுமே
  • ஆப்பிள் விஷன் ப்ரோவை அணிந்து கொண்டால், போனின் ஆப்ஸ்கள்(Apps) நாம் பார்க்கும் விதமாக கண்களுக்கு தெரியும், அதனை நம் கைகளால் தொடுவதன் மூலமாகவும், பார்ப்பதன் மூலமாகவும் நம் குரல் மூலமும் கட்டுப்படுத்த முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ரியல் தியேட்டர் அனுபவத்தை அதுவும் 4K தரத்திற்கும் மேலான அனுபவத்தில் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சி போன்றவற்றை நாம் இருக்கும் இடத்தில் நம்மால் தேவையான அளவு திரையை பெரிதாக்கி பார்க்க முடியும். திரைப்படங்களை நமக்கு ஏற்ற ரெசொலூஷனில்(Resolution) மிகப்பெரிய திரையில் ஆடியோ அமைப்புடன் காணும் உண்மையான அனுபவம் மற்றும் கேம்ஸ்களில் நாமே அந்த விளையாட்டில் இருப்பதுபோன்ற தத்ரூபத்தை நீங்கள் உணரலாம்.
  • இதில், மொத்தம் 12 கேமராக்கள் உள்ளன, மேலும் இரண்டு 4K டிஸ்ப்ளேக்கள் ஐபீஸில் பொருத்தப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் அன்லாக்கிங்கிற்காக ஆப்டிக் ஐடி ரெட்டினல் ஸ்கேன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் Magic Keyboard மற்றும் Magic Trackpad ஆகியவற்றிற்கான ஆதரவும் உள்ளது. இதன்மூலம் நாம் எந்த இடத்திலும் கீபோர்ட் அமைப்பை பார்க்கமுடியும், அதிலிருந்து நம்மால் டைப்பிங்(Typing) செய்து கொள்ளமுடியும்.
  • வால்ட் டிஸ்னியின் டிஸ்னி+ ஸ்ட்ரீமிங் சேவையும் விஷன் ப்ரோவின் முதல் நாளில் கிடைக்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. டிஸ்னி பல ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்துடன்  சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
  • ஆப்பிள் விஷன் ப்ரோ அடுத்த ஆண்டு 2024 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது, ஆனால் இந்தியாவில் இதனை 2024 பாதியில் அல்லது இறுதியில் எதிர்பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்