வெறும் ரூ.6,699..8ஜிபி ரேம்..டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்.! இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் கோ 2024.!

Tecno Spark Go 2024

டெக்னோ (Tecno) நிறுவனம் அதன் புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று (டிசம்பர் 4ம் தேதி) இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது ஒரு மலிவான ஸ்மார்ட்போன் என்பதால் போனின் ஆரம்ப விலை ரூ.7 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. முன்னதாக டெக்னோ ஸ்பார்க் கோ 2024 ஸ்மார்ட்போனை மலேசியாவில் RM 399 (ரூ. 7,200) என்கிற விலையில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே

இதில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் 720 X 1612 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.6 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. குறிப்பாக இதில் ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் போலவே இருக்கும் டைனமிக் போர்ட் உள்ளது.

123 ஸ்போர்ட்ஸ் மோட்..புளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான வாட்ச்.! ஃபயர்போல்ட் நிறுவனம் அதிரடி.!

பாதுகாப்பிற்காக பாண்டா ஸ்கிரீன், சைடு மௌண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் நீர் எதிர்ப்புக்காக ஐபி ரேட்டிங் உள்ளது. இதனால் போன் கீழே விழுந்தாலும் நீர் சாரல் பட்டாலும் பாதுகாப்பாக இருக்கும்.

பிராசஸர்

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனில் ஆண்ட்ராய்டு 13 கோ ஓஎஸ்-ல் இயங்கக்கூடிய யுனிசாக்கின் டி606 ஆக்டா-கோர் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிப்செட் 1.6 GHz வரை கிளாக் ஸ்பீட் உடன் வேகமான டவுன்லோட் மற்றும் அப்லோட், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 4ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், எப்.எம் மற்றும் ஓடிஜி இணைப்புகளும் உள்ளன. மேலும், டிடிஎஸ் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வந்த முதல் போன் ஸ்பார்க் கோ 2024 ஆகும். இது பாடல் கேட்கும் போதும், திரைப்படங்கள் பார்க்கும்போதும் சிறந்த அனுபவத்தை பயனருக்கு வழங்கும்.

கேமரா மற்றும் பேட்டரி

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 கேமராவைப் பொறுத்தவகையில், டூயல் எல்இடி (LED) ப்ளாஷ் கொண்ட 13 எம்பி ஏஐ டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி ஏஐ லென்ஸ் அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி கேமரா உள்ளது.

24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி..50 எம்பி கேமரா.! நாளை அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 12.!

பேட்டரியைப் பொறுத்தவரையில் அதிக நேர பயன்பாட்டிற்காக 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் கூடிய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

கிராவிட்டி பிளாக், மிஸ்டரி ஒயிட் ஆகிய வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த போன் 3 வேரியண்ட்களில் உள்ளது. 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் அடங்கும்.

இதில் 3 ஜிபி ரேம் வேரியண்டின் விலை மட்டுமே தற்பொழுது வெளியாகி உள்ளது.  இதன் ஆரம்ப விலையானது ரூ.6,699 ஆக உள்ளது. அமேசானில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 7ஆம் தேதி களமிறங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்