5,000mAh பேட்டரி..8ஜிபி ரேம்..டூயல் ஸ்பீக்கர்ஸ்.! இந்தியாவில் அறிமுகமாகும் டெக்னோ மாடல்.?

TECNO Spark Go 2024

டெக்னோ (Tecno) நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C) என்ற போனை நவம்பர் 28ம் தேதி (நேற்று) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கிடையில் டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) என்ற ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்தது.

மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்பார்க் கோ 2024 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் கிடைக்கும் என்று டெக்னோ வெளிப்படுத்தியுள்ளது. ஸ்பார்க் கோ 2024, இந்தியாவில் அமேசானில் பிரத்யேக அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது.

50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! சத்தமில்லாமல் அறிமுகமான டெக்னோவின் புதிய மாடல்.?

வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், டீஸர் போஸ்டர் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போனின் உடனடி வருகையைக் குறிக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 விவரக்குறிப்புகள்

டிஸ்பிளே

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 ஆனது பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் 720 X 1612 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.6 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் போலவே இருக்கும் டைனமிக் பார்ட்டுடன் வருகிறது. இதே அம்சங்களை கொண்ட டிஸ்பிளே டெக்னோ ஸ்பார்க் 20சி போனிலும் உள்ளது.

பிராசஸர்

ஆண்ட்ராய்டு டி-கோ ஓஎஸ்-ல் இயங்கக்கூடிய இந்த போனில், யுனிசாக்கின் டி606 ஆக்டா-கோர் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. இதில் 4ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், எப்.எம் மற்றும் ஓடிஜி இணைப்புகளும் உள்ளன.

கேமரா மற்றும் பேட்டரி

டெக்னோ ஸ்பார்க் கோ 2024 ஆனது டூயல் எல்இடி (LED) ப்ளாஷ் கொண்ட 13 எம்பி ஏஐ டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி ஏஐ லென்ஸ் அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி கேமரா உள்ளது.

5,400mAh பேட்டரி..100W வயர்டு, 50W வயர்லெஸ் சார்ஜிங்.! ரியல்மீ ஜிடி 5 ப்ரோவின் விலை இதுதான்.?

பேட்டரியைப் பொறுத்தவரையில் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி, டெக்னோ ஸ்பார்க் கோ 2024 போனில் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

கிராவிட்டி பிளாக், மிஸ்டரி ஒயிட், அல்பெங்லோ கோல்ட் மற்றும் மேஜிக் ஸ்கின் ஆகிய 4 வண்ணங்களில் அறிமுகமாகவுள்ள இந்த போன், 3 மாடல்களில் வருகிறது. அதன்படி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் அடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்