ரூ.7,000 க்கு அட்டகாசமாக அறிமுகம் ஆகும் டெக்னோ பாப் 8! எப்போது தெரியுமா?
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ மொபைல் சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சம் கொண்ட ஒரு மொபைல் போனை கொண்டு வந்து இருக்கிறது. அந்த போனின் பெயர் என்னவென்றால் டெக்னோ பாப் 8 (Tecno Pop 8). இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,000-க்கும் குறைவாக இருக்கும் என முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த ஆண்டின் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!
அந்த தகவலை தொடர்ந்து தற்போது கிடைத்து இருக்கும் தகவல் என்னவென்றால், ரூ.7,000 க்கு இந்த போன் விற்பனை வரலாம் என கூறப்படுகிறது. இந்த போனின் அம்சங்கள் என்னவென்பதையும், இந்த போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பதனை பார்க்கலாம்.
டெக்னோ டாப் 8 சிறப்பு அம்சங்கள் :
இந்த டெக்னோ பாப் 8 (Tecno Pop 8) போன் ஆனது எல்சிடிஎச்டி பிளஸ் 6.6-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) வசதியுடன் வருகிறது. எனவே, படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்க்கும்போது உங்களுக்கு நன்றாக இருக்கும்.
இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் 13எம்பி பின் கேமராவையும் + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . எனவே புகைப்படங்களை எடுக்க விரும்புவர்களுக்கும் இந்த போன் கண்டிப்பாக பிடிக்கும். இந்த ஃபோனுக்கு 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது. அத்துடன் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடனும் வருகிறது.
மேலும், 4ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் வருகிறது என்பதால் கண்டிப்பாக இந்த போன் உபயோகம் செய்யும் போது போன் ஹேங் பிரச்சனை இருக்காது என தெரிகிறது.
அறிமுகம் எப்போது?
இந்த அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள இந்த போனை சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த போன் அறிமுகம் ஆகும்போது தான் விலை எவ்வளவு என்பது தெரிய வரும் என்று கூறப்படுகிறது. நம்ப தக்க வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவலை வைத்து பார்க்கையில் இந்த போன் ரூ.7,000 க்கு வரும் என்றே கூறுகிறார்கள்.
கண்டிப்பாக இந்த விலையில் இந்த டெக்னோ பாப் 8 போன் அறிமுகம் ஆனது என்றால் பலரும் வாங்குவார்கள். அந்த அளவிற்கு குறைவான பட்ஜெட்டில் இந்த போன் நிறைய நல்ல அம்சங்களை கொண்டு இருக்கிறது. பட்ஜெட் போன் விரும்புபவர்கள் இந்த போன் வாங்கலாம்.