சூரியனின் ஆயுள் முடிவடைகிறது…!!!! உலகமே இருளில் மூழ்கப்போகும் அபாயம்…!!!! சூரியனின் உதயமும்,மறைவும் இனி இருக்காது…!!!
உலக உயிர்கள் அனைத்திற்க்கும் முதன்மையானதும்,முக்கியமானதுமான சூரியன் படிப்படியாக இறந்து கொண்டு வருகிறது என அதிர்ச்சி தகவலை தற்போது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சூரியன் ஒரு நடுவயதுடைய நட்சத்திரம்.
இந்த சூரியனில் அணுக்கரு இணைவு என்னும் இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து,ஒவ்வொரு நொடியும் தொடர்ந்து ஒளி ஆற்றல்,வெப்ப ஆற்றல்,கதிரியக்க ஆற்றல் என வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.இந்த வினையானது சூரியனில் உள்ள ஹைட்ரஜன் இருக்கும் வரை மட்டுமே நிகழும்,இந்நிலையில்,சூரியன் இறக்கும் நிலையில் நமது பூமிக்குரிய சூரியன் திடநிலை படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அண்டத்திலுள்ள சூரியன்களுக்கும் ஆயுட்காலம் உண்டு. இதேபோல் பூமிக்கு சொந்தமான சூரியனும் படிப்படியாக இறப்படைந்து வருவதாகவும், இதனால் திட பளிங்கு நிலைக்கு மாறிவருவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமானது கையா செயற்கைக்கோளின் உதவியுடன் இதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மிகப் பெரிய வெள்ளை குள்ள நட்சத்திரங்கள் தங்கள் முடிவுகாலம் வரும் போது திடமான உலோக படிகங்களாக மாற்றமடைந்து வருவதாக கூறப்படுகின்றது.எனவே,நமது சூரியனும் 10 பில்லியன் ஆண்டுகளில் படிக வெள்ளை குள்ளகிரகமாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இதனால் சூரியனை நம்பியுள்ள பூமியின் நிலையை காலம் தான் முடிவு செய்ய முடியும் என்று விஞஞானிகள் கூறுகின்றனர்.
DINASUVADU.