ஒன்ப்ளஸ் பிராண்ட்டின் ஸ்மார்ட்போன்கள் ஆனது, அதன் வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான ஏமாற்றங்களையும் அளிக்காத ஒரு பிராண்ட் ஆகும். வன்பொருள் அம்சங்களாக இருக்கட்டும் அல்லது மென்பொருள் அம்சங்களாக இருக்கட்டும், சரியான கலவையில், எந்த விதமாக சமரசமும் இல்லாமல், வேகமான மற்றும் புதிய செயல்திறன் எல்லைகளை தொட்டு பார்ப்பதில் ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கு நிகர் ஒன்ப்ளஸ் தான்.
பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்கள் மல்டி டாஸ்கிங், பேட்டரி மற்றும் கேமரா செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகையில், சிலர் ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் ஆர்கனைசேஷனில் கவனம் செலுத்துகிறார்கள்.
அதற்கான அத்துணை பெருமைகளையும், ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான வால்பேப்பர்களை உருவாக்கும் ஸ்வீடன் நிபுணர் ஆன ஹம்பஸ் ஓல்ஸனே ஏற்கிறார். ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் கலைநயம் மிக்க மற்றும் ஈர்க்க கூடிய வால்பேப்பர்களுக்கு பின்னால் நிற்பது ஹம்பஸ் தான்.
அவர் தற்பொழுது கோவாவில் வசிக்கிறார், நிறுவனத்தின் ஆரம்பகால ஸ்மார்ட்போன்கள் தொடங்கி வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் வரையிலாக, ஒன்ப்ளஸ்-ன் கலை நயம் மிக்க பகுதியை கவனித்துக் கொள்கிறார். இவரின் மிக சிறப்பான மற்றும் அதிகம் நேசிக்கப்பட்ட வேலையாக ஒன்ப்ளஸ் 2 வால்பேப்பர்களை சுட்டிக்காட்டலாம்.
ஒன்ப்ளஸ் 2 ஆனது ஒரு சுத்தமான, பளபளப்பான நீல நிற பாணியைக் கொண்டிருந்தது. அது மற்ற ஸ்மார்ட்போன்களின் வால்பேப்பர்களின் கூட்டத்தில் இருந்து தனித்து காணப்பட்டது. ஒன்ப்ளஸ் X-க்கு, ஹம்பஸ் திரவ உலோக ஸ்டைல் வால்பேப்பர்களை கையாண்டார். அது மிக இயல்பானதாக இருந்தது, அதே சமயம் மக்களின் ரசனையை பரிசோதனை செய்யும் வேலையையும் பார்த்தது.
ஒன்ப்ளஸ் 3 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, ஒரு 3டி வடிவத்திலான மலை, அழகிய அக்ரிலிக் பிரஷ் ஸ்ட்ரோக்ஸ் வழியாக உருவாக்கம் பெற்றது. ஒன்ப்ளஸ் 3டி-ஐ பொறுத்தவரை, ஹம்பஸ் மிகவும் சுருக்கமான, வெப்பமான மற்றும் இன்னும் தீவிரமான வண்ணங்களை கையாண்டார். நிறுவனத்தின் மிகச் சமீபத்திய ஸ்மார்ட்போன்களான ஒன்ப்ளஸ் 5 மற்றும் ஒன்ப்ளஸ் 5டி-யில் வால்பேப்பர் பாணியில் பல மாற்றங்கள் காட்சிப்பட்டது.
ஒரு எளிய பின்னணியில், மிதக்கும் பொருட்களை போன்ற வால்பேப்பரை அறிமுகப்படுத்தியது. அந்த வால்பேப்பர்கள் ஒரு எளிமையான, இன்னும் சுத்தமான உணர்வை வெளிப்படுத்தியது. அதன் பின்னர் ஹம்பஸ், இரண்டு தீவிரமான கலைப்படைப்பை தொடர்ந்தார் – ஒன்று ஒரு பனிக்கட்டி குகை, மற்றொன்று சூடான எரிமலைகள்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…