நோக்கியா 8 ப்ரோ( Nokia 8 Pro ) ஸ்மார்ட்போன் வெளிவரப்போகிறது.!
நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிந்த வண்ணம் உள்ளது. நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு(manual sensor) அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் பல்வேறு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது எச்எம்டி குளோபல் நிறுவனம். இந்நிறுவனம் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணியில் உள்ளது
நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.01-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 × 2160 பிக்சல் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இந்த நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருவியில் 16எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச்(4000mah) பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி நீடித்து உழைக்கும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல் வெளிவரவில்லை.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.