நோக்கியா 6 (2018) முற்றிலும் அட்டகாசமான வடிவில் வருகிறது..!!
நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் உலகம் முழுவதும் அதிகளவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனை செய்ப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது நம்பத்தகுந்த மாடல் ஆகும்.
எச்எம்டி குளோபல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் ஆனது புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை தற்சமயம் 3ஜிபி ரேம் வசதியுடன் வெளிவந்துள்ளது, ஆனால் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்த தகவலின் அடிப்படையில் இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிளாக், வைட், புளு போன்ற நிறங்களில் இந்த நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் கிடைக்கும்.