போப் ஆண்டவர் பெயரில் தயாரிக்கப்பட்ட புதிய கப்பல்..!

Default Image

 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம், உலகின் அதிவேக கப்பல் ஒன்றை  தயாரித்து சேவையில் ஈடுபடுத்தி வருகிறது. போப் ஆண்டவர் போப் பிரான்சிஸ் பெயரில் பிரான்சிஸ்கோ என்ற பெயரில் இந்த கப்பல் தயாரிக்கப்பட்டது. போப் ஆண்டவர் பிறந்த இடமான அர்ஜென்டிானாவின் பியானோ ஏர்ஸ் நகரிலிருந்து உருகுவே நாட்டின் ரியோ டி லா பிளாட்டா இடையே இந்த கப்பல் இயக்கப்படுகிறது.

பொதுவாக அதிவேக படகுகள் தயாரிக்கப்பட்டு, இந்த படகுகள் 58 நாட்டிக்கல் மைல் வேகம் வரை தொடும் திறனை பெற்றிருக்கும். ஆனால், முதல்முறையாக இது அதிவேக கப்பலாக உருவாக்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயம்.  இந்த அதிவேக கப்பலில் 1,000 பயணிகளும், 150 கார்களும் செல்ல முடியும். மணிக்கு 67 நாட்டிக்கல் மைல் வேகத்தில், அதாவது மணிக்கு 107.4 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பியானோ ஏர்ஸ் மற்றும் ரியோ டி லா பிளாட்டா நகரங்களை இந்த கப்பல் 2 மணிநேரத்தில் கடந்துவிடுகிறது. 2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் உருகுவே நாட்டை சேர்ந்த நிறுவனத்துக்காக தயாரிக்கப்பட்டு சேவையில் உள்ளது. இந்த அதிவேக கப்பல் 99 மீட்டர் நீளமும், 26.94 மீட்டர் அகலமும் கொண்டது. 500 டன் எடை கொண்டது.

இந்த கப்பலில் இரண்டு ஹல் எனப்படும் அலுமினிய அடிச்சட்ட அமைப்பு பயன்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு ஹல் அமைப்பும் எரிபொருள் நிரப்பும் தொட்டியாக பயன்படுகிறது. இந்த அதிவேக கப்பலில் போயிங் 747 விமானத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஜிஇ சிஎஃப்6 ஜெட் எஞ்சின் மாறுதல்கள் செய்து பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த கப்பலில் இருக்கும் எல்எம்2500 டர்பைன்கள் இயற்கை எரிவாயு அல்லது சாதாரண எரிபொருளில் இயங்கும். கப்பல்களுக்கான எரிபொருள் வெறும் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டுமே தேவைப்படும். பிற நேரத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் என்பது இதன் முக்கிய விசேஷமாக கூறப்படுகிறது. இந்த கப்பலில் பயணிகள் தங்களது சொந்த கார்களை எடுத்துச் செல்வதற்கான இடவசதி மட்டுமின்றி, வரி இல்லா பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் மது பார் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்