நெட் சும்மா பிச்சுக்க போகுது! எலான் மஸ்க் உடன் இணைந்த ஏர்டெல்!
இந்தியாவில் ஸ்டார்லிங்கின் அதிவேக இணையத்தை கொண்டு வர ர ஏர்டெல் ஸ்பேஸ்எக்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளது.
அதே சமயம், எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். எனவேம் ஏர்டெல் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதிவேக இன்டர்நெட் வழங்குவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்ததிலும் ஏர்டெல் கையெழுத்திட்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை வழங்குவதற்கு முன்பு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கான தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறுவது அவசியம். ஏற்கனவே, மஸ்க் தென் ஆப்பிரிக்காவிலும் செயல்படுத்த அந்நாட்டிடம் அனுமதி கேட்டிருந்தார்.
அதற்கு அனுமதி கொடுக்கமுடியாது என அந்நாட்டு நிர்வாகம் திட்டவட்டமாக கூறியது. அதன்பின் மஸ்க் BEE விதிகள் காரணமாக தனக்கு அனுமதி கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து ” அவருக்கு ஸ்டார் லிங்க் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது என்பது BEE விதிகள் காரணமாக இல்லை.
எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், நமது நாட்டின் சட்டங்களைப் பின்பற்றி பதிவு செய்தால் அதற்கான சேவைகளை வழங்கலாம். ஆனால், மஸ்க் அதனை செய்யவில்லை. இதன் காரணமாக தான் அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை என தென் ஆப்பிரிக்கா நிர்வாகம் விளக்கமும் அளித்தது. எனவே, இது போன்று இந்தியாவில் ஆகிவிடக்கூடாது என்பதால் முதலிலே அனுமதி வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டு இருக்கிறார். அனுமதி பெற்றவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.
ஸ்டார்லிங்க் சேவையின் நன்மைகள்
- இந்தியாவில் இந்த சேவை அறிமுகமானது என்றால் ஸ்டார்லிங்க், குறைந்த தாமதத்துடன் (low latency) அதிவேக இணைய சேவையை மக்களுக்கு வழங்கும் இது வீடியோ கால், ஆன்லைன் கேமிங் போன்ற செயல்பாடுகளுக்கு இன்னும் சிறப்பாக இருக்கும்.
- அதே சமயம் நாட்டின் தொலைதூர மற்றும் இணைய சேவை குறைவாக உள்ள பகுதிகளிலும், ஸ்டார்லிங்க் சேவைகள் மூலம் இணைய சேவையை வேகமாக நாம் பெறலாம்.
மேலும், ஸ்டார்லிங்க் சேவையின் அறிமுக தேதி மற்றும் விலை பற்றிய விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஏர்டெல் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து, விரைவில் இந்த விவரங்களை அதிகாரப்பூர்வமாகவே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.