சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான (iQOO) தனது புதிய மொபைலான “iQOO நியோ 9 ப்ரோ” சீனாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்தியாவில் பிப்ரவரி 22 அன்று அறிமுகப்படுத்துகிறது. தற்போது, அதற்கான அதன் முன்பதிவை இந்தியாவில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கியது.
இதனுடைய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஒரு தகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக நாளில் முன்பதிவு செய்தால் பிரத்யேக சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, Amazon மற்றும் நிறுவனத்தின் சொந்த வலைத்தளமான iQOO.com இலிருந்தும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்யும் போது, அந்நிறுவனம் 1000 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. அது மட்டும் இல்லாமல், போனிற்கு 2 வருட வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் அணைத்து அம்சங்களுடன் முன்னணி மொபைல் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும்.
இது ஸ்மார்ட்போன் கேமிங் விளையாட உகந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப் மூலம் இயக்கப்படுகிறது, சூப்பர் கம்ப்யூட்டிங்கிற்கான Q1 சிப் உள்ளது. இந்த சிப்செட் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
Chatbot-ஐ Gemini என பெயர் மாற்றம் செய்தது கூகுள் நிறுவனம்!
அதிக நேரம் பயன்படுத்தும் வகையில், இந்த ஸ்மார்ட்போன் 5160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதை வேகமாக சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இது 144 ஹெர்ட்ஸ் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், இதில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. பின்புற கேமராவில் 50MP பிரதான லென்ஸ் உள்ளது, இரண்டாவது கேமரா 8MP ஆகும். iQOO Neo 9 Pro இரண்டு நிறங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். ஒன்று கருப்பு நிறத்தில் இருக்கலாம், இரண்டாவது சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…