ஆண்ட்ராய்டு போன்ல கூட 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே..ஆன இதுல..? ஏமாற்றமளிக்கும் ஆப்பிள்.!
ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தனது ஐபோன் 15 சீரிஸில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்களை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. இதில் ஆக்ஷன் பட்டன், டைனமிக் ஐலேண்ட் கட்அவுட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் என பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட முதல் ஐபோன், இந்த ஐபோன் 15 சீரிஸ் என்று கூட சொல்லலாம். அதே அளவிற்கு இந்த ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸில் கவனம் செலுத்தி வருவதாக வதந்திகள் பரவி வருகிறது.
அதன்படி, ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரக்குறிப்புகள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளது. இந்த ஐபோன் 16 சீரிஸில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 அல்ட்ரா (ப்ரோ மேக்ஸ்) என நான்கு மாடல்கள் வரலாம்.
iPhone 16 Series: அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஆப்பிள்.! விரைவில் களமிறங்குகிறதா ஐபோன் 16 சீரிஸ்.?
டிஸ்பிளே
ஐபோன் 16 சீரிஸில் எல்டிபிஎஸ் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி, ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் முறையே 6.12 இன்ச், 6.69 இன்ச் அளவில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே இருக்கலாம்.
தற்பொழுது சந்தைகளில் அறிமுகமாகிவரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வரும் நிலையில், ஆப்பிள் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 16 ப்ரோவில் 6.27 இன்ச் அளவுள்ள டிஸ்பிளேவும், ஐபோன் 16 அல்ட்ராவில் 6.86 இன்ச் டிஸ்பிளேவும் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 அல்ட்ராவில் 2,400 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் இருக்கலாம்.
பிராசஸர்
ஆப்பிள் தனது ஐபோன் 15 சீரிஸில் ஏ17 ப்ரோ சிப் பயன்படுத்தியது. இப்போது அதிக செயல்திறனுக்காக ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 அல்ட்ரா மாடலில் ஏ18 ப்ரோ சிப் பொறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஐபோன் 16 மற்றும் 16 பிளஸ் மாடல்கள் ஏ17 சிப் பொருத்தப்பட்டிருக்கலாம். ஏ18 ப்ரோ சிப்பில் வைஃபை 7 போன்ற புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தலாம்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக செயல்படப் போகிறோம்..! சாம் ஆல்ட்மேன்
கேமரா
ஐபோன் 16 ப்ரோ மற்றும் 16 அல்ட்ராவில் டெட்ரா ப்ரிசம் டெலிஃபோட்டோ அம்சம் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம். இதன் மூலம் 3x முதல் 5x வரை வரையிலான ஆப்டிகல் ஜூம் செய்து கொள்ளலாம். குறிப்பாக ஐபோன் 16 ப்ரோவில் 48 எம்பி கொண்ட அல்ட்ராவைடு கேமரா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி
ஐபோன் 16 சீரிஸ் ஆனது 16 ஜிபி ரேம் + 286 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்டிலிருந்து ஆரம்பம் ஆகலாம். பேட்டரி ஆனது முந்தைய மாடல்களை விட 2.5 மடங்கு அதிக திறனைக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது வரை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் உறுதிப்படுத்தப்படாத அம்சங்கள் ஆகவே உள்ளன. இந்த 16 சீரீஸ் ஆனது அடுத்த ஆண்டு (2024) ஆப்பிளுக்கு ஏற்ற செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.