நவீன உலகின் தொழில்நுட்ப தாக்கம்…! சாதக பாதகங்களை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்..!
தற்போதைய உலகில் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் ஒன்றுதான் தொழில்நுட்பம். அத்தகைய தொழில்நுட்பம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரது வாழ்விலும் பல நன்மைகளை செய்வதோடு அதற்கு எதிர்மனையான பலவித தீய செயல்களை செய்வதற்கும் காரணமாகிறது.
குறிப்பாக, மாணவர்களின் வாழ்க்கையில் தொழிநுட்பம் என்பது புரட்டிபோட்டுவிட்டது என்று கூட சொல்லலாம். அந்த வகையில், சமூகத்தில் தொழிநுட்பத்தின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றும், அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அறியலாம்.
சமூகத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம் என்ன..?
தொழில்நுட்பம் என்பது தற்பொழுது உள்ள காலகட்டத்தில் போக்குவரத்து, பாதுகாப்பு, உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக, இணையத்தின் வாயிலாக சைபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் தனிப்பட்ட நபரின் தகவல்களை திருடுவதோடு அதனை வைத்து மக்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியை நடைமுறையாக்கியுள்ளனர்.
சமூகத்தில் தொழில்நுட்பத்தின் நேர்மறையான தாக்கம் :
வளர்ந்து வரும் தொழிநுட்பமானது (i.e.செயற்கை நுண்ணறிவு (AI)) மாணவர்களின் கல்வி மற்றும் பல தொழில்நுட்ப துறைகளிலும் முன்னேற்றத்திற்க்கு பெருமளவில் உதவியாக உள்ளது. மாணவர்கள் புத்தகங்களை பார்த்து படித்து கற்றுக்கொள்வதைவிட இணையதளம் சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் தகவல் பரிமாற்றம், வணிகம் மற்றும் தொழில் துறைகளில் பயனளித்துள்ளது. வாழ்க்கை முறைகளில் உடைகளைச் சுத்தம் செய்யவும், உணவைத் தயாரிக்கவும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லவும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.
சமூகத்தில் தொழில்நுட்பத்தின் எதிர்மறை தாக்கங்கள் :
என்னதான் தொழில்நுட்பம் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்துறைகளின் முன்னேற்றத்திற்கு உதவினாலும், மக்களை அதில் அடிமைப்படுத்திவிடுகிறது. இதனால், மனச்சோர்வு மற்றும் பிற மனநல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப பயன்பாடு மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்த வாழ்க்கை திருப்தியையும் குறைக்க வழிவகுத்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், தூக்கம் இன்மை, உடல் பருமன், மாணவர்களின் படிப்பில் கவனக்குறைவு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே உள்ள தொடர்பு மற்றும் நெருக்கம் குறைந்ததோடு, சைபர்புல்லிங் போன்ற தேவையற்ற ஈடுபாடுகளை செய்வதற்கு வழிவகுத்துள்ளது.
சமூகத்தில் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கு என்ன..?
அனைத்து தரப்பு மக்களும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு அத்தியாவசியங்களை அணுகுவதை தொழில்நுட்பம் சாத்தியமாக்கியுள்ளது. மேலும், ஒரு குறிப்பிட்ட வகை உதவி தேவைப்படும் நபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஒருவரால் அணுக முடியாத வாய்ப்புகளைப் பெறவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன், கணினிகள் போன்ற பல சாதனங்களின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.