இன்று “தமிழுக்கான கூகள்”(google for tamil) நிகழ்வு சென்னையில் நடந்துவருகிறது.!

Default Image
இந்தியாவில் உள்ள பல தேசிய மொழிகளுக்கும் ஆதரவு தரும் வகையில் கூகள் நிறுவனம் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ,உலகின் முதல் மொழி தமிழ்மொழி என்பதாலும், தமிழ் மொழியில் இணையம் பயன்படுத்துவோர் அதிகமாக இருப்பதாலும், தமிழ் மொழியை உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் பேசுவதாலும், சிங்கப்பூர்,  இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தமிழ் மொழி அரசு மொழியாகவும், மலேசியா, மொரிசியஸ், தென் ஆப்ரிக்கா நாடுகளில் சிறுபான்மை மொழியாகவும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழ் மொழி பேசும் மக்களின் வசதிக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கூகள் நிறுவனம் இன்று சென்னையில் (மார்ச் 2018 13ம் தேதி) செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு “Google for Tamil” எனும் நிகழ்வை  “ஹயாத் ரிஜென்ஸி” Hyatt Regency Chennai ​ஓட்டலில் நடத்த்திவருகிறது.
இதில் குறிப்பாக
  • இந்திய மொழிகளை இணையத்தில் கையாளும் சிக்கல்
  • ​தமிழுக்கான  இணைய தள கட்டமைப்பை ​வலுப்படுத்துதல்
  • தமிழில் இணைய தளம் நடத்துவோர் கூகள் அட்சென்ஸ் பயன்படுத்துதல்
  • கூகள் விளம்பரங்கள் வழியாக வருமானம் ஈட்டுதல்
  • தமிழ் மொழி உலக முதல் மொழியாக இருப்பதும்
போன்ற தலைப்புகளில் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடக்க இருக்கிறது.
தமிழில் பிளாக், இணைய தளம், யூடுப் காணொளி உருவாக்குபவர்கள் , தமிழ் மொழி ஆர்வலர்கள், தகவல் தொழில்நுப்ட துறையில் இருப்போர், மாணவர்கள் போன்றோர் கலந்துகொள்வது மிகவும் ​பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இருக்கும் டெக் தமிழ் வாசகர்கள் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
​​இணைய தளம் நடத்துபவர்கள், பங்கேற்க விரும்புபவர்கள்  இந்த தளத்தில் முன் பதிவுசெய்துவிட்டு செல்லவும். ​
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்