CMF Phone 1 : நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
நத்திங் (Nothing) நிறுவனம் சமீபத்தில் அதன் சிஎம்எஃப் (CMF) என்ற தனது துணை பிராண்டை அறிமுகம் செய்தது. CMF பிராண்டின் கீழ், இதுவரை Earbuds, Headphones, Smartwatch மற்றும் GaN enkicharger போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது, சிஎம்எஃப் (CMF) பிராண்டின் கீழ், முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆம், தனது முதல் போனை நத்திங் நிறுவனம் அதன் முதல் போனை அறிமுகம் செய்தது போல, சிஎம்எஃப் போன் (1) [CMF Phone (1)] என்கிற பெயரில் வெளிவரவிருக்கிறது. A015 மாடல் எண் கொண்ட ஸ்மார்ட்போன் பற்றி இந்த மாத தொடக்கத்தில் வெளியான ஒரு தகவலின்படி, இது அட்டகாசமான அம்சங்களுடன் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்பட்டது.
அதன்படி, பட்ஜெட் பிரியர்களை குறி வைக்கும்படி முதலில் வெறும் ரூ.12,000-க்கு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது கிடைத்த தகவலின்படி, இந்த 5G ஸ்மார்ட்போன் 2024 ஜூலை மாதம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதன் வெளியீட்டு தேதி குறித்த தகவல் இல்லை என்றாலும், ரூ.20,000 முதல் ரூ.23,000 வரையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாஸடிக் பாடியுடன் வரும் இந்த CMF Phone (1) ஆரஞ்சு (Orange), பிளாக் (Black) மற்றும் வெள்ளை (White) நிறத்தில்விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது, இந்த போனை பற்றி தொழில்நுட்ப ஆர்வலர்கள் வழங்கிய சிறப்பம்சங்கள் குறித்து தகவலை பார்க்கலாம்.
வெளியீட்டுத் தேதி நெருங்கும் நிலையில், அதன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான விவரங்களுக்கு காத்திருங்கள்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…