நத்திங் கீழ் CMF வெளியிடும் முதல் 5G ஸ்மார்ட்போன்.! பட்ஜெட் விலையில் எப்போது அறிமுகம்?

CMF Phone 1

CMF Phone 1 : நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

நத்திங் (Nothing) நிறுவனம் சமீபத்தில் அதன் சிஎம்எஃப் (CMF) என்ற தனது துணை பிராண்டை அறிமுகம் செய்தது. CMF பிராண்டின் கீழ், இதுவரை Earbuds, Headphones, Smartwatch மற்றும் GaN enkicharger போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தற்பொழுது, சிஎம்எஃப் (CMF) பிராண்டின் கீழ், முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாவது  உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆம், தனது முதல் போனை நத்திங் நிறுவனம் அதன் முதல் போனை அறிமுகம் செய்தது போல, சிஎம்எஃப் போன் (1) [CMF Phone (1)] என்கிற பெயரில் வெளிவரவிருக்கிறது. A015 மாடல் எண் கொண்ட ஸ்மார்ட்போன் பற்றி இந்த மாத தொடக்கத்தில் வெளியான ஒரு தகவலின்படி, இது அட்டகாசமான அம்சங்களுடன் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்பட்டது.

CMF Phone 1
CMF Phone 1 [image -@madhavkant05]
அதன்படி, பட்ஜெட் பிரியர்களை குறி வைக்கும்படி முதலில் வெறும் ரூ.12,000-க்கு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது கிடைத்த தகவலின்படி, இந்த 5G ஸ்மார்ட்போன் 2024 ஜூலை மாதம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதன் வெளியீட்டு தேதி குறித்த தகவல் இல்லை என்றாலும், ரூ.20,000 முதல் ரூ.23,000 வரையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாஸடிக் பாடியுடன் வரும் இந்த CMF Phone (1) ஆரஞ்சு (Orange), பிளாக் (Black) மற்றும் வெள்ளை (White) நிறத்தில்விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது, இந்த போனை பற்றி தொழில்நுட்ப ஆர்வலர்கள் வழங்கிய சிறப்பம்சங்கள் குறித்து தகவலை பார்க்கலாம்.

CMF Phone 1
CMF Phone 1 [image -@madhavkant05]

சிறப்பம்சங்கள்

  • A015 மாடல் எண் கொண்ட CMF ஃபோனின் MediaTek Dimensity 7200 இருப்பதாக கூறப்படுகிறது.
  • மேலும் இது மென்மையான 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்குமாம்.
  • 8GB LPDDR4x ரேம் மற்றும் 128/256GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
  • 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.
  • மேலும், இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக, புளூடூத் 5.3 மற்றும் Wi-Fi 6 ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் பின்புறத்தில் செங்குத்து அமைப்புகொண்ட மற்றொரு கேமராவும் இருக்கும், இது போக முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்குமாம்.

வெளியீட்டுத் தேதி நெருங்கும் நிலையில், அதன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான விவரங்களுக்கு காத்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்