இனி ரீல்ஸ் டவுன்லோட் பண்ண எந்த ஆப்ஸும் தேவையில்லை..! இன்ஸ்டாகிராம் வெளிட்ட அசத்தல் அம்சம்.!
மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் ஆனது தனது செயலியில் அடிக்கடி பல புதிய அம்சங்களை வெளியிட்டு, பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நவம்பர் 17ம் தேதி கூட ரீலில் வாய்ஸ் ஓவர் (Voiceover) இணைப்பது மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கக் கூடிய ஒரு ஏஐ டூல் போன்ற அம்சங்களைக் கொண்டு வந்தது.
அதேபோல இப்போதும் ஒரு சிறப்பான அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதுவரை அனைவரும் இன்ஸ்டாகிராமில் இருக்கக்கூடிய ரீல்ஸ்-ஐ பதிவிறக்கம் செய்ய தனியாக ஒரு ஆப் அல்லது இன்ஸ்டாகிராம் மோட் ஏபிகே போன்றவற்றை பயன்படுத்துவோம். ஆனால் இந்த புதிய அம்சம் மூலம் பொதுக் கணக்குகளில் இருந்து ரீல்ஸ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏஐ ஸ்டிக்கர் டூல் முதல் ஃபில்டர்ஸ் வரை.! புதிய அம்சங்களை வெளியிட்ட இன்ஸ்டாகிராம்.!
இதனை இன்ஸ்டாகிராம் தலைவரான ஆடம் மொசெரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, பயனர்கள் பொது கணக்குகளால் உருவாக்கப்பட்ட ரீல்ஸ்களைத் தங்கள் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள முடியும். அதற்கு, பயனர்கள் ரீலில் உள்ள ஷேர் ஐகானை கிளிக் செய்து, அதில் இருக்கும் டவுன்லோட் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
4,700mAh பேட்டரி..80W ஃபிளாஷ் சார்ஜிங்..12ஜிபி ரேம்..! ஒப்போவின் புது மாடல் என்ன தெரியுமா.?
இப்போது அந்த ரீல்ஸ் உங்கள் கேலரியில் பதிவாகியிருக்கும். ஆனால் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரீல்ஸில் கிரியேட்டரின் இன்ஸ்டாகிராம் கணக்கின் வாட்டர்மார்க் இருக்கும். மேலும்,ரீலைப் பதிவிடக் கூடிய கிரியேட்டர் மக்கள் தங்கள் ரீல்ஸ்களைப் பதிவிறக்கும் செய்வதற்கான அம்சத்தை முடக்க முடியும்.
ரீல்ஸ்களைப் பதிவிறக்கம் செய்யும் இந்த புதிய அம்சம் முதன்முதலில் ஜூன் மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இப்போது இந்த அம்சம் உலகம் முழுவதும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு கிடைக்கிறது. இதற்கு உங்களுடைய இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.