கூகுளை ஃபாலோ செய்யும் வாட்ஸ்அப்.? விரைவில் வரப்போகும் புதிய வசதி.!

Google - WhatsApp

வாட்ஸ்அப்: கூகுள் மீட்டிங் போல வாட்ஸ்அப் செயலியிலும் தேதி நேரம் குறிப்பிட்டு குழு மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரபல கூகுள் நிறுவனம் மூலம் குழு அல்லது இரு நபர்கள் தனியே தேதி குறிப்பிட்டு மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இந்த கூகுள் மீட்டிங் வசதியில் பயனர்கள் தங்கள் மீட்டிங் நடைபெறும் தேதி நேரம் குறிப்பிட்டு அந்த வரவேற்பு லிங்கை (Invitation Link) அனுப்ப முடியும். அதனை ஏற்பதும் ஏற்காததும் மற்ற நபரின் விருப்பம்.

தற்போது அதே போன்ற ஒரு வசதியை பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த வசதி மூலம் ஒரு நிகழ்வை (Event) நீங்கள் சாதாரணமாக ஒரு குரூப் போல நீங்கள் உருவாக்கி கொள்ளலாம். பின்னர், அதில் தேதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு அந்த வரவேற்பு லிங்கை (Invitation Link) மற்ற பயனர்களுக்கு அனுப்பி விடலாம்.

இந்த வரவேற்ப்பு லிங்கை ஏற்பதும், ஏற்காமல் நிராகரிப்பதும் பயனர்களின் விருப்பம். அந்த வாட்ஸ்அப் நிகழ்வு (WhatsApp Event) மூலம் சாதாரணமாக குரூப் சாட் செய்து கொள்ளலாம், குரல் பதிவு அனுப்பலாம். குறிப்பிட்ட நேரத்தில் வீடியோ கால் செய்து மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.

இந்த புதிய வசதியானது முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டும் உள்ள பீட்டா வெர்சன் வாட்ஸ்அப்பிலல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் நிறை குறைகள் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் இந்த Event வசதி மேம்படுத்தப்பட்டு அனைத்து தரப்பு பயனர்களும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படும்  என கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செய்தி பரிமாற்ற பாதுகாப்பு போல குழுவில் உள்ள நபர்கள் தவிர வேறு யாரும் குழுவில் உள்ள செய்திகள், குரல் பதிவுகளை பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்