ஏர்டெல்(ம)ஜியோவிற்கு டிபார்ட்மென்ட் ஆப் டெலிகொம் (DoT) 13 இலக்க எண்ணை வழங்கியுள்ளது..!
டிபார்ட்மென்ட் ஆப் டெலிகொம் (DoT) மெஷின்-டூ-மெஷின் கம்யூனிகேஷன்ஸ் (M2M) சோதனையை செய்வதற்காக நாட்டில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 13 இலக்க எண்ணை வழங்கியுள்ளது.
எம்2எம் எனப்படும் மெஷின் டூ மெஷின் என்பது, மனிதர்களின் உதவிகள் இல்லாமலேயே, பல சாதனங்களுக்கு இடையிலேயான தகவல் பரிமாறித்தை நிகழ்த்திக்கொள்ளும் ஒரு வழிமுறையாகும். ஒரு சாதனத்தில் இருந்து இன்னொரு சாதனத்திற்கு மாற்றப்படும் இந்த 13 இலக்க சிம், பார்ப்பதற்கு ஒரு சாதாரணமான சிம் கார்டு போலவே தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மெஷின் டூ மெஷின் தகவல்தொடர்பானது, கார் டிராக்கிங் சாதனங்கள், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் மீட்டர் உட்பட பல செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு 13 இலக்க எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 13 இலக்க எண்ணை ஏற்கனவே அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 13 இலக்க எண்கள் ஆனது சோதனை நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்ப்படும். அதாவது எம்2எம் எனப்படும் மெஷின் டூ மெஷின் தகவல்தொடர்பு என்பது ஸ்மார்ட் ஹோம்ஸ், ஸ்மார்ட் கார்ஸ் போன்றே கான்செப்ட்களுக்கானது. நிலையான மொபைல் எண்களுக்கானது அல்ல. மொபைல் எங்களை பொறுத்தவரை இன்னும் 10-இலக்க எண்களாகவே இருக்கும்.
2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ஒரு டாட் அறிக்கையின்படி, கூறப்படும் எம்2எம் கம்யூமனிகேஷன்ஸ் ஆனது ஜூலை 1, 2018 ஆம் ஆண்டுக்குள் அமலுக்கு வரும். தற்போது வரையிலாக, மேற்க்குறிப்பிட்ட சோதனை நோக்கங்களுக்காக ஒரு மில்லியன் குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.