தொடரும் சைபர் தாக்குதல்.! சாம்சங்கை அடுத்து ஆப்பிள் பயனர்களுக்கு எச்சரிக்கை.!
ஆப்பிள் தயாரிப்புகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த குழு (CERT-In), மூன்று நாட்களுக்கு முன்னதாக சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களில் சைபர் தாக்குதல்களால் ஏராளமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறியது.
இதையடுத்து, பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. இப்போது, சாம்சங்கைத் தொடர்ந்து ஆப்பிள் தயாரிப்புகளிளிலும் இதே போன்ற ஏராளமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அறிவித்துள்ளது.
சாம்சங் போன் பயனர்களே கவனம்.! இந்திய அரசு எச்சரிக்கை.!
அந்த அறிவிப்பின்படி, வெர்சன் 17.2க்கு முந்தைய ஐஓஎஸ், ஆப்பிள், வாட்ச்ஓஎஸ், ஐபாட் ஓஎஸ் மற்றும் ஆப்பிள் சஃபாரி பிரௌசர் உட்பட பல்வேறு ஆப்பிள் தயாரிப்புகளில் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் தயாரிப்புகள் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீமின் மதிப்பீட்டின் படி, ஹை ரிஸ்க்கில் (High Risk) உள்ளது.
இந்த தாக்குதலினால் ஹேக்கர்கள் உங்கள் முக்கியமான தகவல்களை அணுகலாம், உங்களது பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை உடைக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஒரு சாதனைத்தை இலக்காக வைத்து ஸ்பூஃபிங் அட்டாக்கையும் செய்யலாம். முன்னதாக சாம்சங் மொபைலில் இருக்கக்கூடிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் 11 , 12, 13 மற்றும் 14 ஆகிய வெர்சன்களில் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என்று எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் கூறியது.
தன்னை போலவே இருக்கும் AI மாடல்.! அதிர்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின்.!
இப்போது இதே தாக்குதல்கள் ஆப்பிள் தயாரிப்பிலும் கண்டறியப்பட்டுள்ளது என்பது பயனர்களை அச்சமடைய வைத்துள்ளது. மேலும், சாம்சங் பயனர்கள் இந்த தாக்குதல்களில் இருந்து தப்பிக்க தங்கள் போன்களின் ஓஎஸ் (OS) மற்றும் ஃபார்ம்வேரை (firmware) உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.