மிகப்பெரிய பிரச்சனை தீர்ந்தது..! 50 நாட்களுக்கு பயன்படுத்தலாம் ஸ்மார்ட்போனை..!!
ஸ்மார்ட்போனில் வரும் மிகப்பெரிய பிரச்சனை சார்ஜ் நிற்கவில்லை என்பதுதான்.பொதுவாக ஸ்மார்ட்போனில் சார்ஜ் ஒரு நல கூட நிற்பதில்லை. அந்த குறையை போக்க வந்துள்ளது பிளாக்வியூ நிறுவனத்தின் P10000 என்ற மாடல்.
இந்த ஸ்மார்ட்போனில் 11000mAh பேட்டரி திறன் இருப்பதால் இனிமேல் செல்போன் பயனாளிகளுக்கு சார்ஜ் குறித்த கவலை இருக்காது. இந்த போன் குறித்த பிற விவரங்களை பார்ப்போம்.
இந்த P10000 என்ற மாடல் ஸ்மார்ட்போனில் ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் போது ஒரு வாரத்திற்கு சார்ஜ் இருக்கும். அதுமட்டுமின்றி பயன்படுத்தாமல் இருந்தால் 50 நாட்களுக்கு சார்ஜ் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை 5வி/5ஏ சார்ஜர் கொண்டு வெறும் 2 மணி நேரம் 25 நிமிடங்களில் முழு சார்ஜ் செய்துவிடலாம் என்பதும் ஒரு சிறப்பம்சம் இருப்பினும் இந்த ஒரு மாடல் போன் தான் பெரிய பேட்டரியை கொண்டுள்ளது என்பது உண்மையில்லை.
ஏற்கனவே சீன நிறுவனத்தின் அவுகிடெல் நிறுவனத்தின் K10000 வகை ஸ்மார்ட்போனும், K10000 புரோ மாடலும் 10000mAh பேட்டரி திறனை கொண்டது ஆகும். அதே நேரத்தில் சார்ஜ் நிற்கும் நேரம் என்பது அந்தந்த போனில் உள்ள சாப்ட்வேர் மற்றும் ஆப்பிள், கூகுள் நிறுவனத்தின் செயலிகளை பொருத்தது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இந்த P10000 என்ற மாடல் ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் டிஸ்ப்ளே 2160×1080 ரெசலூசனில் உள்ளது.
மெடியாடெக் ஆக்டோகோர் ஹீலியோ P23 சிப்செட் கொண்ட இந்த போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 7.1 நெளகட் தன்மையுள்ள இந்த போனில் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ மிக விரைவில் வரவுள்ளது.
பேசியல், பிங்கர் பிரிண்ட் போன்ற டெக்னாலஜி அம்சங்கள் கொண்ட இந்த போனின் பின்பக்கம் கண்ணாடி அல்லது லெதரை கொண்டுள்ளது மேலும் பெரிய பேட்டரியை தவிர இந்த போனில் வேறு சிறப்பு அம்சங்கள் இல்லை.
இந்த போனை நீங்கள் வாங்க விரும்பினால் அலி எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் $200 விலையில் பெற்று கொள்ளலாம் மேலும் ஹூவாய் மேட் 10 மாடலில் ஏற்கனவே 4000mAh பேட்டரி தன்மையுடன் உள்ளது என்பதும், இந்த மாடல் போனும் 5வி/5ஏ சார்ஜரில் செயல்படும் என்பதும் வெறும் 15 நிமிடத்தில் 30-35 சதவீத சார்ஜும் 30 நிமிடத்தில் 55-60 சதவீத சார்ஜும், ஒரு மணி நேரத்தில் 85-90 சதவீத சார்ஜும் செய்யப்படும் வகையில் இந்த மாடல் உள்ளது.