விண்வெளியில் சுற்றும் டெஸ்லா கார்..!பூமியோடு மோதுமா?

Default Image

 

விண்வெளி பயணத்தில், மிக கடினமான மற்றும் முரண்பாடான ஒரு சிக்கல் இருக்கிறது. அது வேறொன்றுமில்லை விண்வெளிக்குள் நாம் எதையாவது செலுத்தும் போது, அது எங்கே போகிறது, எங்கே போகவேண்டும் என்பதை மிக மிக துல்லியமாக கணிக்கவே முடியாது.

அதற்கு ஆகச்சிறந்த சமீபத்திய எடுத்துக்காட்டு தான் விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட எலான் மஸ்க்கின் -சிவப்பு நிற டெஸ்லா கார்.

கிராவிட்டி எனப்படும் புவியீர்ப்பை நாம் தெளிந்திருக்கும் பட்சத்தில், விண்வெளிக்குள் புகும் பொருளை நம்மால் ஏன் கணிக்க முடியவில்லை என்பதற்கான விளக்கத்தையும் எளிமையாக புரிந்துகொள்ள முடியும். பலமான உந்து சக்தியின் துணைகொண்டு விண்வெளிக்குள் செலுத்தப்படும் ஒரு விண்கலம் ஆனது வாயிட் (Void) எனப்படும் வெற்றிடத்திற்குள் நுழைகிறது.

 

முதல் விஷயம் – இதர கிரகங்கள். விண்வெளியில் பூமி மட்டுமே இல்லை, பூமியை போன்றே புவியீர்ப்பு சக்தி கொண்ட வேறு கிரகங்களும் உள்ளன. அவைகளால் ஒரு விண்கலத்தின் பயண பாதையில் குறுக்கிட முடியும். அந்த குறுக்கீடானது, திட்டமிடப்பட்ட பயண பாதையை மிக எளிமையாக மாற்றி அமைக்கவும் முடியும். இந்த இடத்தில், ஒரு விண்கல ஏவல் சார்ந்து நிகழ்த்தப்பட்ட ஆயிரமாயிரம் பகுப்பாய்வுகள் மற்றும் கணிதங்கள் காணாமல் போகும்.

இரண்டாவது விஷயமானது, முதல் விஷயத்தின் விளைவாக ஏற்படும் ஒரு தொடர் நிகழ்வாகும். இதர கிரகங்களின் புவியீர்ப்பு தாக்கத்தினால், விண்கலத்தின் நிலை மற்றும் வேலாசிட்டியில் (வேகம்) மாற்றங்கள் ஏற்படும். அது ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி, எதிர்காலத்தில் இது எங்கு செல்லும் என்பதை பற்றி அறிந்துகொள்வதை கடினமாக்குகிறது.

 

நடந்து முடியும் வரை இனிஷியல் பொசிஷன் (Initial Position) எனப்படும் ஆரம்ப நிலையை கணிக்கவே முடியாது. அப்படியாக கணிக்க முடியாத அந்த இனிஷியல் பொஷிஷன் தான், குறிப்பிட்ட விண்கலத்தின் எதிர்காலத்தையே நிர்ணயம் செய்கிறது. இது போன்ற பல காரணங்களால் தான், விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட டெஸ்லா கார் ஆனது திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.

இனிஷியல் பொசிஷன் உட்பட பல சிக்கல்களை சந்தித்த சிவப்பு நிற டெஸ்லா கார் ஆனது, அதன் ஆரம்ப நிலை மற்றும் திசைவேகத்தில் சில மாற்றங்களை கண்டது. அவைகள் மிகச் சிறிய வித்தியாசங்கள் தான் என்றாலும் கூட, அது கணிக்க முடியாத ஒரு நிலைப்பாட்டை அடைந்தது. டெஸ்லா காரின் பிரதான பாதையானது இன்னும் பூமி மற்றும் செவ்வாய் கோளப்பாதையில் தான் இருக்கிறது என்றாலும் கூட, அது சூரியனை நோக்கி இறங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அடுத்த நூறு ஆண்டுகள் கழித்து டெஸ்லாவின் சிவப்பு நிற கார் – ரோட்ட்ஸ்டர் – ஆனது எங்கு இருக்கும் என்பது பற்றி யாருக்குமே தெரியாது. ஆனால் புள்ளியியல் (Statistics) ரீதியாக அது இன்னும் ரெட் பிளானட் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை நோக்கி தான் பயணிக்கிறது. மறுகையில் அந்த கார், விண்மீன்களுக்கு இடையேவும் நுழையலாம் அல்லது ஆவியாகி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அல்லது அடுத்த 15 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமி அல்லது வீனஸ் அல்லது சூரியனுடனான ஒரு மோதலையும் நிகழ்த்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்