பிரபலமான மொபைல் பிராண்டுகளில் ஒன்றான டெக்னோ (Tecno), வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகள் மற்றும் பட்ஜெட்டுகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில், தற்போது டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C) என்ற போனை அமைதியாக அறிமுகம் செய்துள்ளது.
போனின் விலை மற்றும் அது எப்போது விற்பனைக்குக் கிடைக்கும் என்ற தகவல் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், டெக்னோ ஸ்பார்க் 20சி போனின் விவரக்குறிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
டெக்னோ ஸ்பார்க் 20சி ஆனது பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் கூடிய 6.6 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 720 X 1612 பிக்சல்கள் ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் பொருந்தியுள்ளது. ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் போலவே இருக்கும் டைனமிக் பார்ட்டுடன் வருகிறது.
இது 2.2GHz கிளாக் ஸ்பீடுடன் ஆக்டா-கோர் மீடியாடெக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இருப்பினும், சிப்செட் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட்டாக இருக்கலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உள்ளது. இதில் 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் இணைப்புகளும் உள்ளன.
டெக்னோ ஸ்பார்க் 20சி ஆனது எல்இடி (LED) ப்ளாஷ் கொண்ட 50 எம்பி ஏஐ டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி ஏஐ லென்ஸ் அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 எம்பி கேமரா உள்ளது.
பேட்டரியைப் பொறுத்தவரையில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000 mAh திறன் கொண்ட லித்தியம் பேட்டரி, டெக்னோ ஸ்பார்க் 20சி போனில் பொருத்தப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது.
கிராவிட்டி பிளாக், மிஸ்டரி ஒயிட், அல்பெங்லோ கோல்ட் மற்றும் மேஜிக் ஸ்கின் ஆகிய 4 வண்ணங்களில் அறிமுகமாயுள்ள இந்த போன், இரண்டு மாடல்களில் வருகிறது. அதன்படி, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் அடங்கும். இரண்டு மாடல்களும் 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் உடன் வருகின்றன.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…