இந்தியாவில் முதல் முறை! 6000mAh பேட்டரி.. 70W சார்ஜிங்.. அசத்தல் அம்சங்களுடன் POVA 6 Pro!
Pova 6 Pro: இந்தியாவில் முதல் 6000mAh பேட்டரி மற்றும் 70W பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமானது POVA 6 Pro.
உலகளாவிய ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ, அதன் போவா சீரிஸின் கீழ் டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த மாதம் பார்சிலோனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Tecno Pova 6 Pro 5G தற்போது இந்தியாவில் பல்வேறு அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது.
இந்த Tecno Pova 6 Pro 5G ஸ்மார்ட்போனானது இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 6000mAh பேட்டரி மற்றும் 70W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போட்டுடன் வெளியாகியுள்ளது. இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் இப்படி ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
டிஸ்பிளே:
டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 2160ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் மற்றும் லோட் ப்ளூ லைட் உமிழ்வுகளுக்கான TUV ரைன்லேண்ட் சான்றிதழையும் கொண்டுள்ளது.
கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் மெயின் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் உடனான 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மொபைல் பேக் பேனலில் 200க்கும் மேற்பட்ட எல்இடிகளுடன் டைனமிக் மினிஎல்இடி லைட்ஸ் அமைப்பும் உள்ளது. இதனை கால்ஸ், கேமிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஏற்றபடி கஸ்டமைஸ் செய்யலாம்.
மற்ற அம்சங்கள்:
- இது மீடியாடெக் டைமன்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட் மற்றும் ஹைஓஎஸ் 14 (HiOS 14) மூலம் இயக்கப்படுகிறது.
- அதிகபட்சமாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜில் இருந்து கூடுதலாக 12ஜிபி விர்ச்சுவல் ரேம்-ஐ கடன் வாங்கி, இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 24ஜிபி ஆக அதிகரிக்க முடியும்.
- இதுபோன்று மைக்ரோஎஸ்டி ஸ்லாட் வழியாக 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் அதிகரிக்கலாம்.
- டால்பி அட்மாஸ் ஸ்பேஷியல் சவுண்ட்டிற்கான ஆதரவுடன் வரும் முதல் டெக்னோ ஸ்மார்ட்போன் இது.
- இதில் இ-ஸ்போர்ட்ஸ் ப்ரோ ஆபரேஷன் இன்ஜின் மற்றும் கேமிங்கிற்கான 4டி வைப்ரேஷன் சென்ஸும் அடங்கும்.
- இந்த ஸ்மார்ட்போன் கொமட் க்ரீன் (Comet Green) மற்றும் மீட்யராய்ட் க்ரே (Meteorite Gray) என 2 கலர்களில் வெளிவந்துள்ளது.
விலை:
டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.17,999 ஆகவும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலையை ரூ.19,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதும் ரூ.2000 பேங்க் ஆபர் மூலம் குறைக்கப்பட்ட விலையாகும். மேலும், இந்த இரண்டு மாடல்களும் ஏப்ரல் 4ம் தேதி முதல் அமேசானில் (Amazon.in) விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.