டெக் மஹிந்திரா தனது முதல் தகவல், AI & கிளவுட் மையத்தை சவுதியில் திறக்கிறது.!
டெக் மஹிந்திரா நிறுவனம் தனது முதல் தகவல், AI & கிளவுட் மையத்தை சவுதி அரேபியாவில் திறக்க உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திரா, சவுதி அரேபியாவின் ரியாத்தில் தரவு, AI மற்றும் கிளவுட் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மையம் அமைக்க உள்ளது. இதற்காக டெக் மஹிந்திரா நிறுவனம், சவுதி அரேபியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
தேசிய உயர் தொழில்நுட்ப திறனை உருவாக்க, உயர்தர வேலைகளை உருவாக்க, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, மற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்த கல்வி மற்றும் சமூக-பொருளாதார இலக்குகளை இந்த கிளவுட் சென்டர் (CoE) கொண்டிருக்கும் என நிறுவனம் மேலும் கூறியது.
டெக் மஹிந்திரா வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றங்களைச் செயல்படுத்தும் வகையில் அதன் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முதலீடு செய்வதில் நிறுவனம் கவனம் செலுத்துவதாக தெரிவித்தது.
சவூதி அரேபியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் துணை அமைச்சர் ஹைதம் அல்ஓஹலி கூறுகையில், சவூதி அரேபியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியில் கிளவுட், டேட்டா மற்றும் AI ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும், மற்றும் டிஜிட்டல் முன்னணி நிறுவனமான டெக் மஹிந்திராவுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறினார்.
We’re excited to establish our first #Data, #AI, and #CloudCenter of Excellence in Saudi Arabia.
Know More: https://t.co/GDxHSdI4Sl#NxtNow #TechMahindraEMEA pic.twitter.com/vdRnJxUn2E
— Tech Mahindra (@tech_mahindra) February 8, 2023