இந்தியாவை கலக்கவரும் ஹானர் 10 லைட் ….!!!! எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள்…!!!!
இந்த நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பம் தினம்தினம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் போனின் வருகையும் அதிகரித்துள்ளது.இதில் ஒன்றாக ஹுவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஹானர் 10 லைட் ரக ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே,
கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த [EMUI] 9.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. பிரைமரி கேமரா, [f/1.8], 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செல்ஃபி எடுக்க 24 எம்.பி. முன்பக்க கேமரா, பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ், கைரேகை சென்சார் மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
6.21 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே,ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம்., பிராசஸர்ARM மாலி G54 MP4 GPU,4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்,
64 ஜி.பி. மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதிஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் EMUI 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை13 எம்.பி. பிரைமரி கேமரா,எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8,2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, கைரேகை சென்சார்டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி. ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், வைட், கிரேடியன்ட் புளு மற்றும் கிரேடியன்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களிலிலும் கிடைக்கிறது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் மற்றும் ஹானர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி முதல் துவங்குகிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் மற்றும் ரூ.2800 மதிப்புள்ள க்ளியர்ட்ரிப் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.இதனால் ஸ்மார்ட் போன் ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
DINASUVADU.