இந்தியாவில் டீம்ஸ் மற்றும் அவுட்லுக் சேவை செயலிழப்பு..! மைக்ரோசாப்ட் ஆய்வு..!

Default Image

இந்தியாவில் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் அவுட்லுக் சேவை செயல்படாதது குறித்து மைக்ரோசாப்ட் ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது.  

இன்று மைக்ரோசாப்ட் நிறுவனம் நெட்வொர்க்கிங் செயலிழப்பால் பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான பயனாளர்களுக்கு மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் அவுட்லுக் சேவை செயல்படவில்லை. அனைத்து வகையான சேவைகளிலும் உள்ள சிக்கல்கள் மற்றும் செயலிழப்புகளை கண்காணிக்கும் இணையதளமான Downdetector-ன் தகவலின் படி இந்தியாவில் 3,700-க்கும் மேற்பட்ட பயனர்கள் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர்.

Microsoft Teams & Outlook

டீம்ஸ் மற்றும் அவுட்லுக் உள்ளிட்ட இணையதளத்தின் பல சேவைகளைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தடைகளையும் ஆயிரக்கணக்கான பயனர்களின் சிக்கல்களையும் கவனித்து வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்தது. இந்த செயலிழப்பு குறித்து மைக்ரோசாப்ட் கூறுகையில், “மைக்ரோசாஃப்ட் வைட் ஏரியா நெட்வொர்க் (WAN) முழுவதும் உள்ள சாதனங்களில் நெட்வொர்க் இணைப்புகளில் சிக்கல் ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளோம்” என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

Microsoft Teams

இது இணையத்தில் உள்ள பயனர்களுக்கு இடையேயான அஸூருக்கான (Microsoft Azure) இணைப்பையும், தரவு மையங்களில் உள்ள சேவைகளுக்கு இடையிலான இணைப்பையும் பாதிக்கிறது என்று மேலும் கூறியது. பாதிப்பை ஏற்படுத்திய நெட்வொர்க் மாற்றத்தை சரிசெய்யும் வேலைகள் நடைபெற்று வருவதால் அனைத்து சேவையையும் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்