டாடா சொன்ன HCL…. 350 ஊழியர்களை பணி நீக்கியது.!
இந்தியாவின் 3 ஆவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் நிறுவனம், உலக அளவில் 350 பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது.
HCL டெக்னாலஜிஸ் தனது கிளையண்ட் நிறுவனமான மைக்ரோரோசாப்ட்டின் செய்தி தொடர்பான தயாரிப்புகளில் பணிபுரிந்த தனது 350 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஊழியர்களுக்கு இது குறித்த தகவல் கடந்த வாரம் நகராட்சி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா, குவாத்தமாலா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் செப்டம்பர் 30 வரை மட்டுமே பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர். அறிக்கையின் படி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பனி நீக்க ஊதியம் வழங்கப்படும்.
ஒப்பந்த அடிப்படையில் HCL இன் கீழ் வழங்கப்படும் பணியின் தரத்தில் மைக்ரோசாப்ட் திருப்தி அடைய வில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. இப்போது ஒப்பந்தம் முடிவடைந்ததால் பணியாளர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடுவதாக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.