ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் டாடா.! ஓசூர் ஆலையை விரிவுபடுத்த முடிவு.!
கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று நடந்த போர்டு மீட்டிங்கில் பேச்சு வார்த்தையின் போது, இந்தியாவில் இருக்கும் சீனாவின் தைவானைச் சேர்ந்த வின்ஸ்ட்ரான் இன்ஃபோகாம் என்ற ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் கையகப்படுத்தியது. இந்த ஆலையை 125 மில்லியன் டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியுள்ளது.
இதனால் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றது. இதை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தி, டாடா குழுமம் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கத் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
வாட்ஸ்அப்பில் AI சாட் போட்.! மறைத்து வைக்க புதிய வசதி அறிமுகம்.!
இதற்கு முன், டாடா நிறுவனம் ஏற்கனவே ஐபோன் கேஸ் போன்ற ஆப்பிள் நிறுவனத்துக்கான சில உதிரி பாகங்களை தயாரித்து வந்தது. இப்போது ஐபோன் உற்பத்தியில் களமிறங்கிய டாடா எலக்ட்ரானிக்ஸ், அதன் ஓசூர் ஆலையை விரிவுபடுத்தி ஐபோன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க உள்ளது. இதனால் ஆப்பிள் ஐபோன்களின் உற்பத்தி அதிகமாவதோடு, ஏற்றுமதி அளவும் அதிகரிக்கும்.
ஓசூரில் உள்ள டாடா குழுமத்தின் ஐபோன் உற்பத்தி ஆலை சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 15,000 பேர் பணிபுரிகின்றனர். இப்போது இந்த ஓசூர் ஆலையை அடுத்த 12 முதல் 18 மாதங்களில் விரிவுபடுத்த டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் 25,000 முதல் 28,000 பேர் வேலைவாய்ப்புக்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
50எம்பி கேமராவுடன் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி 13சி..! எப்போ தெரியுமா.?
ஓசூர் ஆலையில் ஐபோன்களின் சில பகுதிகள் அசெம்பிளி செய்யப்படுகிறது. பிறகு மீதமுள்ள உதிரிபாகங்கள் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, முழுவதுமாக தயாரானதும் ஏற்றுமதிக்கு அனுப்ப தயாராகிவிடும். மேலும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் உள்ள ஆலையை விரிவாக்கம் செய்ய ஆலைக்கு அருகிலுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.