தைவா D26K10 24 இன்ச் எல்இடி டிவி இன்றுமுதல் இந்தியாவிலும்..!

Published by
Dinasuvadu desk

 

D26K10 24 இன்ச் எல்இடி டிவியை, ஜப்பானிய நிறுவனமான தைவா தனது புதிய பிராண்டான  இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இகாமர்ஸ் தளங்களில் கிடைக்கும் இதன் இந்திய விலை ரூ. 7,999. இந்தியாவில் தற்போது ஏகப்பட்ட டிவிக்கள் விலையில் போட்டிபோட்டுக்கொண்டு அறிமுகமாகின்றன. ட்ரூவிஷன், சியோமி போன்ற பிராண்டுகள் தங்களின் உயர் தொழில்நுட்ப பொருட்களை சிறந்த விலையில் வழங்குகின்றன.

டிசைன் மற்றும் கனெக்டிவிட்டி

தைவா எல்.ஈ.டி டிவிக்கள் குறுகிய பேசில்களை மேல் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கொண்டுள்ளன. 24இன்ச் எச்.டி திரையானது 1366×768 பிக்சல் மற்றும் 16.7 மில்லியன் டைனமிக் நிறங்களை தரக்கூடியது. இந்த திரையில் 178டிகிரி கோணத்தில் இயங்கும் சினிமா ஜூம் வசதி உள்ளது.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, தைவா டிவியில் ப்ளூடூத் வசதி உள்ளது. பின்புறத்தில் 2 யூ.எஸ்.பி போர்ட், ஆடியோ வீடியோ மற்றும் 1 வி.ஜி.ஏ வெளியீடு வசதியும் உள்ளது. இதன் மூலம் டிவியை கணிணி அல்லது லேப்டாப்புடன் இணைத்து சிறப்பான அனுபவத்தை பெறலாம். மேலும் இதில் கூடுதலாக ஆடியோ ஸ்பீக்கர்களையும் இணைக்கலாம்.

மென்பொருள்

இது சாதாரண தொலைக்காட்சி என்பதால், ஆண்ராய்டு இயங்குதளத்தில் இயங்குவதில்லை. ஆனால் இந்த தைவா D26K10 டிவிக்களில் பொழுதுபோக்க பல கேம்கள் உள்ளன. இதில் உள்ள பேக்லைட் மோட் மூலம் பயனர்கள் எல்.ஈ.டி டிவியின் பேக் லைட்டை கட்டுப்படுத்தலாம். இந்த வசதியின் மூலம் சந்தையிலேயே குறைவான மின்சாரம் பயன்படுத்து டிவியாக இது இருக்கும் என சொல்கிறது தைவா.

சிறப்பானதா தைவா டிவி?

திரையின் தரத்தை பற்றி பேசும் போது, தைவா எல்.ஈ.டி டிவி தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. கணிணியுடன் டிவியை இணைத்து பல்வேறு வகை வீடியோக்களை ஒளிபரப்பி பரிசோதித்ததில், முடிவு மிகவும் பாராட்டக்கூடியதாக இருந்தது. எச்.டி வீடியோக்கள் மிகவும் துல்லியமாக இருந்தன.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

25 minutes ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

1 hour ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

2 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

2 hours ago

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

2 hours ago

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…

3 hours ago