உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலி என்றால் வாட்ஸ்அப் என்று கூறலாம். இந்த வாட்ஸ்அப்பில் அடிக்கடி பல அப்டேட்டுகளும் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு “சேனல் அலெர்ட்” என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்ததாக மெசேஜை பின் (Pin Message) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியீட்டு இருந்தது.
இப்படி தொடர்ச்சியாக நல்ல அம்சங்களை கொண்டு வரும் வாட்ஸ்அப் அடுத்ததாக ஐபோன் பயனர்களை கவரும் வகையில் ஒரு அப்டேட்டை கொண்டு வந்து இருக்கிறது. அது என்னவென்றால், வாட்ஸ்அப் தனது ‘iOS’ செயலியில் புதிய கண்களை கவரும் வண்ண…வண்ண வகையில் இருக்கும் தீம் அம்சத்தை தற்போது உருவாக்கி கொண்டு இருக்கிறதாம்.
இனி வாட்ஸ்அப்பில் மெசேஜை Pin செய்யலாம்.! எப்படி தெரியுமா.?
இந்த அசத்தலான அம்சத்தின் மூலம் பயனர்கள் 5 கலர்களை வரை தங்களுடைய தீமில் மாற்றிக்கொள்ளலாமாம். இந்த அசத்தலான அம்சம் சமீபத்தில் WhatsApp Beta for iOS 24.1.10.70 -யில் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுடைய வாட்ஸ்அப்பின் முன்புற வண்ணங்கள் மட்டுமின்றி மெஜேஜ் செய்தால் வரும் வண்ணத்தை மாற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அட்டகாசமான அம்சம் தற்போது விறு விறுப்பாக உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் ‘iOS’ செயலியின் பீட்டா பதிப்பில் முழுவதுமாக இந்த அம்சம் வரும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த வாட்ஸ்அப் அம்சம் எல்லா வாட்ஸ்அப் பயணர்களுக்கும் எப்போது வரும் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
ஆனால் விரைவில் பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. வாட்சப் வந்த காலத்தில் இருந்து ஒரே வண்ணமான பச்சை மட்டுமே இருந்தது. இதனையடுத்து தற்போது வண்ணனத்தை மாற்றிக்கொள்ளலாம் என்ற அம்சம் வரவுள்ளதாக வெளியான தகவல் பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எப்போது இந்த அம்சம் வரும் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…