PhonePe மற்றும் GPayக்கு பதில் உள்நாட்டு செயலிகளை ஆதரிக்க வேண்டும்: இந்திய அரசுக்கு பரிந்துரை
PhonePe மற்றும் GPay ஆகியவை UPI பரிவர்த்தனைகளில் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, உள்நாட்டு செயலிகளை ஆதரிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. paytm அதன் வங்கி சேவைகளில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஃபின்டெக் நிறுவனங்கள், ஆப்ஸ் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான PhonePe மற்றும் Google Pay ஆகியவை அதிக அளவில் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. அக்டோபர்-நவம்பர் 2023ல் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை அளவின்படி UPI பங்களிப்புகளில் 36.39 % Google Pay மற்றும் 46.91 % PhonePe மூலம் கிடைக்கிறது.
காதலர் தின ஸ்பெஷல் ! ஐபோன் 15-க்கு அசத்தல் ஆஃபர்!!
அதே நேரம் உள்நாட்டு செயலியான BHIM UPI 0.22 சதவீதம் மட்டுமே பங்களிப்பை கொடுத்துள்ளது. இதன் காரணமாக உள்ளூர் இந்திய UPI செயலிகளை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ள நிலைக்குழு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட BHIM UPI அதற்கு ஒரு சிறந்த உதாரணம் என மேற்கோள் காட்டியுள்ளது.