சியோமி வெளியிட்ட சூப்பர் பாஸ் ஹெட்போன்!!
சியோமி நிறுவனம் தனது Mi ‘சூப்பர் பாஸ்’ வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது அறிமுகமான இந்த வயர்லெஸ் ஹெட்போன், சியோமியின் மலிவு விலை சாதனங்கள் பட்டியலில் இணைந்துள்ளது.
இந்த ஹெட்போனை சார்ஜ் செய்துகொள்ள மைக்ரோ-USB போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சார்ஜ் இல்லாத நேரங்களில், இந்த ஹெட்போனை சாதாரன ஹெட்போன் போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு, ஸ்மார்ட்போன்களில் இணைத்துக்கொள்ள 3.5mm சாக்கெட்டும் இந்த ஹெட்போனுடன் வழங்கி உள்ளது சியோமி நிறுவனம்.
இந்த ஹெட்போன், தற்போது சந்தையிலுள்ள போட் ராக்கர்ஸ் 400 (Boat Rockerz 400) ரக மலிவு விலை வயர்லெஸ் ஹெட்போன்களுக்கு போட்டியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஹெட்போன், சிவப்பு-கருப்பு மற்றும் சிவப்பு-தங்கம் என இரண்டு நிறங்களில் வந்துள்ளது. இந்த ஹெட்போனை, அமேசான் மற்றும் Mi.com ஆகிய வலைதளங்களில் பெற்றுக்கொள்ளலாம். இதன் விலை ரூ 1,799 ஆகும்.