சாதனை படைத்த ஸ்ட்ராடோலாஞ்ச் விமானம்!
வெற்றிகரமாக உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ராடோலாஞ்ச் (stratolaunch) என்று பெயரிடப்பட்ட அந்த விமானம் விண்வெளியில் ராக்கெட்டுக்கள் மற்றும் செயற்கைக் கோள்களை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக் கோளை ஏவும் ராக்கெட்டில் பெருமளவு எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட்டை ஏவிய பின் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 என்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தின் பிரமாண்டம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. விமானத்தின் இரண்டு இறக்கைகளுக்கு இடையிலான தூரம் 117 மீட்டர்கள் இரு ஒரு கால்பந்து மைதானத்தை விட பெரியதாகும். இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் கலிபோர்னியாவின் மஜாவ் விமானநிலையத்தில் வெற்றி கரமாக சோதனை செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.