மொபைலை சார்ஜ் செய்யும் போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?
இப்போதெல்லாம் எந்த மொபைல் வாங்கினாலும் உள்ளுக்குள் ஒரு வித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் மொபைல் வெடித்து விடுமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளது. கடந்த சில மாதங்களில் இது அதிக ட்ரெண்டான விஷயமாகவே இருந்தது. மொபைலை வாங்கினால் மட்டும் போதாது.
இதற்கு உயிர் கொடுக்க கூடிய சார்ஜ்ரையும் நாம் சரியான வகையில் கையாள வேண்டும். மொபைலை சார்ஜ் செய்யும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 5 முக்கிய டிப்ஸ்கள் இதோ!
சார்ஜ்ர்
நாம் புதுசாக மொபைல் வாங்கும் போது கொடுத்தக அதே சார்ஜரை எப்போதும் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு சார்ஜருக்கும் அதன் மின்சார அளவு வேறுபடும். கையில் கிடைக்கும் கண்ட
சார்ஜர்களை பயன்படுத்தினால் மொபைல் வெடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
புது மொபைல்
புது மொபைல் வாங்கியதும் ஒரு இரவு முழுவதும் சார்ஜ் போட வேண்டிய அவசியம் கிடையாது. இந்த மொபைலை பரிசோதிக்கும் (testing) போதே பெரும்பாலும் இதில் சார்ஜ் போடப்பட்டு தான் இருக்கும். புது மொபைலை ஆன் செய்ததும் 50 சதவீதத்திற்கும் மேல் சார்ஜ் இருந்தால் மொபைலை அப்படியே பயன்படுத்தலாம்.
வெடிக்குமா?
நாம் செய்கின்ற ஒரு சில தவறுகள் தான் மொபைலுக்கு ஆபத்தான நிலையை தருகின்றன. அத்துடன் நமது உயிருக்கும் உலை வைக்கிறது. PUBG போன்ற கேம்களை விளையாடும் போது சார்ஜ் போட்டு கொண்டே விளையாடினால் வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே போன்று போனில் பேசி கொண்டே சார்ஜ் போட்டாலும் இதே நிலைதான். காரணம் பேட்டரி சூடாவதே!
மெமரி
cache-யில் இருக்க கூடிய மெமரியை க்ளியர் செய்வது உங்களின் மொபைலை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியத்தை குறைக்கும். ஏனெனில், மொபைலின் பின்புலத்தில் நாம் பயன்படுத்துவதை விட அதிக ஆப்ஸ்கள் பயன்பாட்டில் இருக்கும். இவை சார்ஜை அதிகம் உறிஞ்சி கொள்ளும் தன்மை கொண்டவை.
போலிகள்
சார்ஜ்ர்களை வாங்கு போது மிக கவனமாக இருத்தல் வேண்டும். பலவித போலி சார்ஜ்கள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. ஆதலால் உங்களின் மொபைல் எந்த பிரண்டை சேர்ந்ததோ அவற்றிலே மொபைல் சர்ஜரையும் வாங்குங்கள்.