Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய கிரகணம் இரவு 9.30 மணிக்கு மேல் நடைபெறும் என்றும் குறைந்தது 4 மணி நேரம் நடக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
இந்த முழு சூரிய கிரகணம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுளின் முழு சூரிய கிரகண அனிமேஷனைப் பார்க்க, கூகுளுக்குச் சென்று “ஏப்ரல் 8, 2024 சூரிய கிரகணம், சூரிய கிரகணம், Solar Eclipse 2024 , Solar Eclipse” போன்ற சொற்களைத் தேடவும். இவ்வாறு தேடும் பொழுது பயனர்கள் சூரிய கிரகண அனிமேஷன் நிகழ்வின் கிராஃபிக் சித்தரிப்பதை காணலாம்.
கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில் கண்ணாடி அணிந்து கொண்டு சூரியனை காணுவது போல் google என்ற வார்த்தையை அனிமேஷன் செய்துள்ளது.
மேலும் இது குறித்து தனது செய்தி குறிப்பில், “ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் ஐந்து முறை சூரிய கிரகணங்கள் நிகழும், இது போன்ற அரிய நிகழ்வுகளின் போது, சிறந்த பார்வையை வழங்கும் இடங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம்.
டெக்சாஸிலிருந்து மைனே வரை உள்ள மாநிலங்கள் முழுமையின் பாதையில் இருக்கும்போது, வட அமெரிக்கா முழுவதும் உள்ள மக்கள் குறைந்தபட்சம் ஒரு பகுதி கிரகணத்தைப் பார்ப்பார்கள்.
நேரடி சூரிய ஒளி கடுமையான கண் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாதுகாப்பான சூரிய ஒளி கண்ணாடிகள் அல்லது மறைமுகமாக பார்க்கும் முறையுடன் கிரகணத்தைப் பார்ப்பது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…