பங்கு சூரிய கிரகணம் தெரியுது…அனல் பறக்க அனிமேஷன் டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Solar Eclipse 2024

Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது.

Solar Eclipse Google
Solar Eclipse Google [file image]
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, ​​பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய கிரகணம் இரவு 9.30 மணிக்கு மேல் நடைபெறும் என்றும் குறைந்தது 4 மணி நேரம் நடக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

இந்த முழு சூரிய கிரகணம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் சூரிய கிரகணம்

கூகுளின் முழு சூரிய கிரகண அனிமேஷனைப் பார்க்க, கூகுளுக்குச் சென்று “ஏப்ரல் 8, 2024 சூரிய கிரகணம், சூரிய கிரகணம், Solar Eclipse 2024 , Solar Eclipse” போன்ற சொற்களைத் தேடவும். இவ்வாறு தேடும் பொழுது பயனர்கள் சூரிய கிரகண அனிமேஷன் நிகழ்வின் கிராஃபிக் சித்தரிப்பதை காணலாம்.

டூடுல் சூரிய கிரகணம்

கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில் கண்ணாடி அணிந்து கொண்டு சூரியனை காணுவது போல் google என்ற வார்த்தையை அனிமேஷன் செய்துள்ளது.

Solar Eclipse 2024
Solar Eclipse 2024 [file image]
மேலும் இது குறித்து தனது செய்தி குறிப்பில், “ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் ஐந்து முறை சூரிய கிரகணங்கள் நிகழும், இது போன்ற அரிய நிகழ்வுகளின் போது, ​​சிறந்த பார்வையை வழங்கும் இடங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம்.

டெக்சாஸிலிருந்து மைனே வரை உள்ள மாநிலங்கள் முழுமையின் பாதையில் இருக்கும்போது, ​​​​வட அமெரிக்கா முழுவதும் உள்ள மக்கள் குறைந்தபட்சம் ஒரு பகுதி கிரகணத்தைப் பார்ப்பார்கள்.

நேரடி சூரிய ஒளி கடுமையான கண் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாதுகாப்பான சூரிய ஒளி கண்ணாடிகள் அல்லது மறைமுகமாக பார்க்கும் முறையுடன் கிரகணத்தைப் பார்ப்பது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்