உலகின் அதிவேகத்தில் செல்லக் கூடிய ராக்கெட்!புதிய சாதனை …
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய தயாரானது. விண்வெளி தொழில்நுட்பத்தில் கோலோச்சி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, சில நாட்களிலேயே நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையும் அளவுக்கு வேகமாகச் செல்லும் ராக்கெட்டை தயாரித்துள்ளது.
உலகின் சக்தி வாய்ந்தது என கருதப்படும் ராக்கெட்டை தயாரித்து, உலக நாடுகளின் பார்வையை திரும்பி பார்க்க வைத்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சி.இ.ஓ. எலன் மஸ்குக்கு விருப்பமான சிவப்பு வண்ண டெஸ்லா காருடன் பொம்மையை அமர்த்தி வைத்து ராக்கெட்டுடன் இணைத்து விண்ணில் ஏவுகிறது.
இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.ஸ்பெசெக்ஸ்.காம் (Spacex.com) இணையதளத்தில் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.