மலைப்பாதை பயணத்திற்கான சில டிப்ஸ்..!

Default Image

 

மலை பிரேதசங்களில் செய்யப்படும் பயணம் தான் பயணங்களில் மிக அழகானதும், அதே நேரத்தில் மிக ஆபத்து நிறைந்ததுமாக இருப்பது. மலைகளில் பயணம் செய்பவர்களுக்கான முக்கிய 10 டிப்ஸ்களை இங்கே வழங்கியுள்ளோம்.

பயண விரும்பிகள் பெரிதும் பயணம் செய்ய விரும்புவது மலைப்பகுதிகளில் தான் குளிர்ந்த காற்று, வளைவுகளால் ஆன ரோடுகள், பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் காட்சி என பயண விரும்பிகள் விரும்பும் அனைத்தும் அம்சங்களும் மலை பயணங்களில் நிறைந்திருக்கும்.

  1. மலை பயணம் செய்வதற்கு முன் வாகனத்தை சர்வீஸ் செய்து கொள்வது நல்லது. வாகனங்களில் நம்மை அறியாமலேயே இருக்கும் சிறிய சிறிய கோளாறுகள் இதனால் சரியாகும்.
  2. முக்கியமாக டயர்களையும் பிரேக்குகளையும் சரி செய்து கொள்ளுங்கள், அவைகளில் தேய்மானம் இருந்தால் உடனடியாக மாற்றி விடுங்கள். மலை பயணங்களில் பிரேக்குகள் சரியாக இல்லாமல் பயணிப்பது ஆபத்து.
  3. மலைஏறுபவர்களுக்கு வழி விடுங்கள் மலை பிரதேசங்களில் பயணிக்கும் போது நீங்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதி மலையில் ஏறுபவர்களுக்கு வழிவிடுங்கள். மலையிலிருந்து இறங்குவதை காட்டிலும் ஏறும்போது தான் வாகனத்தை இயக்குவது கடினம் அதனால் மலையில் ஏறுபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழிவிடுங்கள் இதன் மூலம் பெரும் விபத்துக்கள் கூட தவிர்க்கப்படும்.
  4. கியர்களை சரியாக பயன்படுத்துங்கள் மலை பயணங்களில் போது கியர்களை சரியாக பயன்படுத்துவது என்பது முக்கியமானது. நீங்கள் சாதாரண ரோடுகளில் எந்த கியரில் செல்வீர்களோ அதை விட குறைந்த கியரிலேயே மலையில் பயணிக்க வேண்டும். மலை பயணத்தின் போது சரியாக கியரை பயன்படுத்த வில்லை என்றால் அது கியர் பாக்ஸ் மற்றும் இன்ஜினின் ஆயுளை குறைத்துவிடும். இது உங்களுக்கு பெரும் செலவைகூட ஏற்படுத்தலாம்.
  5. வாகனத்தை ஆப் செய்யாதீர்கள் மலைகளில் இருக்கும் போது இறக்கம் தானே என்று உங்கள் வாகனத்தை ஆப் செய்து வேகமாக இறங்க முயற்சி செய்யாதீர்கள். பெரும்பாலானோர் எரிபொருளை மிச்சப்படுத்த இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
  6. மலைகளில் இருந்து வாகனங்கள் கீழே இறங்கும் போது மிக வேகமாக ரோலர் கோஸ்டர் போல வரும். அப்பொழுது வரும் திருப்பங்களை சமாளிக்க நீங்கள் பிரேக் பிடிப்பீர்கள் அந்த மாதிரியான நேரங்களில் பிரேக் பெயிலியர் ஏற்படலாம். மேலும் பவர் ஸ்டியரிங் உள்ள வாகனங்களில் வாகனம் ஆப்பில் உள்ள போது பவர் ஸ்டியரிங் வேலை செய்யாது.
  7. ஓவர்டேக் செய்யும் போது கவனம் மலைப்பாதைகளில் பெரிய வாகனங்கள் மெதுவாகத்தான் செல்ல முடியும். நீங்கள் செல்லும் வாகனத்தை விட பெரிய வாகனம் உங்கள் முன்னாள் செல்லும் போது நீங்கள் அவர்களை முந்துவதில் கவனமாக இருங்கள். மலைப்பகுதி என்பதால் எதிரே வரும் வாகனங்கள் குறித்து நீங்கள் எளிதாக அறிய முடியாது. அடிக்கடி வளைவுகள் இருப்பதால் நீங்கள் முந்த முயலும் போது வளைவுகள்வந்து நீங்கள் விபத்தில் சிக்க நேரிடலாம் அதனால் கவனம் தேவை.
  8. பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்துங்கள் மலை பயணங்களுக்க இடையே நீங்கள் காரை நிறுத்த நினைத்தால் பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்துங்கள் குறுகலான இடத்தில் காரை நிறுத்தினால் பெரும் போக்கவரத்து நெருக்கடி ஏற்படும். வளைவுகளுக்கு அருகே காரை நிறுத்தினால் எதிரில் வரும் வாகனங்கள் நீங்கள் காரை நிறுத்தியிருப்பது தெரியாமல் உங்கள் மீது மோத வாய்ப்புள்ளது.
  9. பாடல் கேட்பதை தவிருங்கள் மலைப்பயணங்களில் டிரைவிங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிது கவனச்சிதறல் கூட உங்கள் வாகனத்தை விபத்திற்குள்ளாக்கும். அதனால் நீங்கள் பயணத்தின் போது ரேடியோ கேட்பது, பாடல் கேட்பதை தவிர்த்துவிடுங்கள் அதுதான் பாதுகாப்பானது.
  10. ஹைபீம்களை பயன்படுத்தாதீர் இரவு நேரங்களில் நீங்கள் மலைப்பயணம் மேற்கொள்ள நினைத்தால் ஹைபீம்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள் அது எதிரே வரும் வாகன ஓட்டிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். இடைவெளி விட்டு பின் தொடருங்கள் மலைப்பயணங்களில் எதிரே வரும் வாகனங்களில் நிலை குறித்து நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் போதுமான இடைவெளி விட்டு வாகனங்களில் பின் தொடர வேண்டும்.

இதனால் எதிரே செல்லும் வாகனம் திடீர் என பிரேக் பிடித்தாலும் அதனால் உங்கள் வாகனம் அவர்கள் மீது மோதாமல் தவிர்க்க முடியும். அதிவேக பயணத்தை தவிர்க்கவும் மலைபாதை என்பது சாதாரண பாதை போல் ஒழுங்காக இருக்கும் என கூறிவிட முடியாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்