வைஃபை திருட்டை கண்டறிய உதவும் சாப்ட்வேர்: Wireless network watcher..!

Published by
Dinasuvadu desk

நீங்கள் உங்கள் வைஃபை-யை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் அதே நேரத்தில், மூன்றாம் நபர்களும் உங்கள் வைஃபை பாஸ்வேர்டை கண்டறிந்து பயன்படுத்தும் போதுதான் சிக்கலே! அதனால் வைஃபை-ன் அலைவரிசை (பேண்ட்வித்) பிரியும் மற்றும் நெட்வொர்க்கின் வேகமும் வெகுவாக குறையும்.யாராவது உங்கள் வைஃபை நெட்வொர்க்கை இரகசியமாக பயன்படுத்துகிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அது சரியா தவறா என துப்பறியும் நேரம் வந்துவிட்டது.

உங்கள் வைஃபை-யை திருட்டுதனமாக பயன்படுத்தவர்களை/கருவிகளை கண்டறிவது எப்படி என காணலாம்.

உங்கள் வைஃபையில் இணைக்கப்பட்ட கருவிகளை ஸ்கேன் செய்ய ஒரு மென்பொருளை பதிவிறக்கம் செய்தால் போதுமானது. ஸ்கேன் செய்து முடித்தவுடன் உங்கள் வைஃபையில் இணைக்கப்பட்ட கருவிகளை பற்றிய முழுமையான அறிக்கை உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

Wireless network watcher ” என்ற மென்பொருளை உங்கள் விண்டோஸ் கணிணியில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும்.

பின்னர் அந்த கணிணியை, உங்களின் வைஃபை நெட்வொர்க் அல்லது நீங்கள் பரிசோதிக்க விரும்பும் நெட்வொர்க்கில் இணைக்கவேண்டும்.

Wireless network watcher ” மென்பொருளை இயக்கி, “Start Scanning” ஐ கிளிக் செய்யவும்.

இந்த மென்பொருள் முழுவதுமாக ஸ்கேன் செய்துமுடிக்கும் வரை, சில நிமிடங்கள் காத்திருக்கவும்.

ஸ்கேன் செய்து முடித்தவுடன், உங்கள் வைஃபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் அவற்றின் ஐ.பி முகவரியுடன் காட்டப்படும்.

இதன் மூலம் எவ்வளவு கருவிகள் உங்களின் வைஃபை-யை பயன்படுத்தியுள்ளன, வைஃபை பெயர் மூலம் அதன் உரிமையாளர் பெயரைக் கூட கண்டறியலாம். பின்னர் அவர்களை நேரிடையாக எதிர்கொள்ளலாம் அல்லது வைஃபை பாஸ்வேர்டை மாற்றிவிடலாம். மூன்றாம் நபர்கள் உங்கள் வைஃபை-யை பயன்படுத்துவதை தடுக்க மாதமொரு முறை ஸ்கேன் செய்வது மட்டுமில்லாமல் பாஸ்வேர்டையும் மாற்றலாம். “Softperfect Wifi Guard” போன்ற மென்பொருட்களின் மூலம் யாராவது உங்கள் வைஃபை நெட்வொர்க்கில் இணைக்க முயற்சிசெய்யும் போதே கண்டறியலாம்.

IP network scanner மற்றும் who is On My wifi? போன்ற பிரபல மென்பொருள் மூலமும் இத்தகைய ஸ்கேன்களை செய்யலாம். உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் மென்பொருளை தேர்வு செய்யலாம்.

Recent Posts

உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…

23 mins ago

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…

30 mins ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (18/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…

60 mins ago

தனுஷுக்கு எகிறும் எதிர்ப்பு? ‘லைக்’கால் நயன்தாராவுக்குக் குவியும் ஆதரவு!

சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…

1 hour ago

“வாழு வாழ விடு” …தனுஷுக்கு அட்வைஸ் செய்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்!

சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…

1 hour ago

தனி விமானத்தில் நைஜீரியா புறப்பட்டார் பிரதமர் மோடி.! 6 நாள் பயண விவரம் இதோ…

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…

2 hours ago