பைபர் பிராட்பேண்ட் நிறுவனமான ஆக்ட் பைபர்நெட், நியாயமான பயன்பாட்டு கொள்கையின் கீழ் (Fair Usage Polic – FUP) அதன் டேட்டா வரம்புகளையும், இணைய வேகத்தையும் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அட்டகாசமான மாற்றமானது, கடந்த ஏப்ரல் 13 தேதி முதல், பெங்களூரில் உள்ள அதன் அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களுக்கும் கிடைத்து வருகிறது.
ஆக்ட் பைபர்நெட் அதன் டவுன்லோட் வரம்பு மற்றும் அப்லோட் வரம்புகளை ஒரு மாதாந்திர டேட்டா வரம்பிற்குள் இணைத்துள்ளது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் இனி தங்கள் தேவைகள் மற்றும் பயன்பாட்டின் படி பதிவேற்றங்கள் அல்லது பதிவறக்கங்களை நிகழ்த்தலாம், குறிப்பிட்ட டவுன்லோட் மற்றும் அப்லோட் வரம்புகளை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
ஆக்ட் பிளேஸ் திட்டத்தை பொறுத்தவரை, 75 எம்பிபிஎஸ் வேகத்திலான 280 ஜிபி டேட்டாவை வழங்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ட் எண்டர்டெயின்மெண்ட் திட்டத்தை பொறுத்தவரை, 75 எம்பிபிஎஸ் வேகத்திலான 320 ஜிபி டேட்டாவை கிடைக்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ட் ஸ்டார்ம் ஆனது 100 எம்பிபிஎஸ் வேகத்தின் கீழ் 350ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.
ஆக்ட் லைட்னிங் திட்டமானது, இனி 125 எம்பிபிஎஸ் வேகத்திலான 500பி ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ட் இன்கிரிடிப்பில் திட்டமானது. 150 எம்பிபிஎஸ் வேகத்திலான 800பி ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ட் ஏஷென்ஷியல் திட்டமானது, 150 எம்பிபிஎஸ் வேகத்திலான 1100பி ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது
ஆக்ட் அட்வான்ஸ் திட்டமானது, இனி 150 எம்பிபிஎஸ் வேகத்திலான 1500பி ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ட் ப்ராக்ரஸ் திட்டமானது, 150 எம்பிபிஎஸ் வேகத்திலான 2000பி ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ட் கிகா திட்டமானது, 1 ஜிபிபிஎஸ் வேகத்திலான 2500பி ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் படி மேம்படுத்தப்பட்டுள்ளது.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, மேற்குறிப்பிட்டுள்ள, ஆக்ட் ஸ்விஃப்ட், ஆக்ட் ராப்பிட் ப்ளஸ், ஆக்ட் பிளேஸ், ஆக்ட் எண்டர்டெயின்மெண்ட், ஆக்ட் ஸ்டார்ம், ஆக்ட் லைட்னிங், ஆக்ட் இன்கிரிடிப்பில், ஆக்ட் ஏஷென்ஷியல், ஆக்ட் அட்வான்ஸ், ஆக்ட் ப்ராக்ரஸ் மற்றும் ஆக்ட் கிகா ஆகிய திட்டங்கள் முறையே ரூ.675, ரூ.949, ரூ.1049, ரூ.1149, ரூ.1349, ரூ.1999, ரூ.2999. ரூ.3999. ரூ.4999 மற்றும் ரூ.5999/- என்கிற விலைக்கு வாங்க கிடைக்கிறது.