ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பாதுகாக்க SnoopSnitch அப்பை பயன்படுத்தலாமே..!!
இப்போது வெளிவரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளிவருகிறது, இருந்த போதிலும் சில ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அம்சம் மிகவும் குறைவு என்பதால் சில எதிர்பாரத விபத்துகள் நடக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற்றும் செயல்திறன் இரண்டையும் கவனத்தில் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கிறார்கள்.
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக உபயோகம் செய்ய சில வழிமுறைகள் உள்ளது, மேலும் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற அமைப்புகள் உள்ளது, இந்த அம்சங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக உபயோகம் செய்ய உதவும்.
கூகுள் பிளே ஸ்டோரில் SnoopSnitch-எனும் ஆப் வசதி உள்ளது, இந்த ஆப் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக உபயோகம் செய்ய உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த SnoopSnitch-ஆப் ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ இயங்குதளத்தில் மட்டுமே பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆப் உங்கள் மொபைல் நெட்வொர்க் பாதுகாப்பு குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்தும், அதன்பின்பு மொபைல் ரேடியோ தரவை சேகரித்து பகுப்பாய்வு செய்யும் தன்மையை கொண்டுள்ளது.
டிராக்கிங் அச்சுறுத்தல்களைப் பற்றி எச்சரிக்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த SnoopSnitch- ஆப் பொறுத்தவரை அப்டேட்ட செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள செக்யுரிட்ட பேட்ச் குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ள உதவும்.
உங்கள் மொபைலில் நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களைக் கணக்கெடுங்கள். முடிவில், நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இமேஜ் எடிட்டர் உள்ளிட்ட பல அப்ளிகேஷன்கள் வெகுநாள்களாகப் பயன்படுத்தாமல், மொபைல் மெமரியை வெறுமனே அடைத்துக்கொண்டிருக்கும்.
மேலும், பல அப்ளிகேஷன்கள் பின்புறத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் பேட்டரியும் கணிசமான அளவு காலியாகிக் கொண்டிருக்கும். எனவே, தொடர்ந்து பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை அவ்வப்போது அன்-இன்ஸ்டால் செய்து மொபைலின் பேட்டரி மற்றும் செயல்திறனை அதிகரியுங்கள்.
மொபைல் பாதுகாப்புக்காக ஆன்ட்டி-வைரஸ் அப்ளிகேஷன் பயன்படுத்துவது அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஆன்ட்டி-வைரஸ் அப்ளிகேஷன் பொதுவாக மொபைலின் பின்புறம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்ட்டி-வைரஸ் பயன்படுத்தும்போது,அவை மொபைலின் வேகத்தைக் குறைப்பதோடு, பேட்டரியையும் அதிகம் பயன்படுத்தும்.