ஸ்நாப் டீல் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்! தரம் குறைந்த செல்போன் விற்பனை…

Default Image

கோவை மாநகரிலுள்ள டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஸ்நாப் டீல் இணையதள சேவை மூலமாக ரூ.9,400 பணம் செலுத்தி செல்போன் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

அதன்பின், சில நாள்களிலேயே அந்த செல்போன் பழுதாகியுள்ளது. இதையடுத்து, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் சேவை மையத்தில் செல்போனை கொடுத்துள்ளார். பழுது பார்த்து கொடுக்கப்பட்ட செல்போனை உபயோகித்தபோது மீண்டும் அது பழுதாகியுள்ளது.

Related image

இதுகுறித்து பெங்களூரில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் மீண்டும் செல்போனை வாங்கி, பழுது நீக்கி கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் செல்போன் பழுதாகியதால், அந்த செல்போனை உபயோகிக்க இயலாத நிலையில், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தனக்கு ஏற்பட்ட தொல்லைகளுக்கு நிவாரணம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனம், வைத்தியநாதனுக்கு அவர் விலையாக கொடுத்த ரூ.9,400-ஐ திருப்பிச் செலுத்தவேண்டும். மேலும், இழப்பீடாக ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 2,500-ஐயும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிபதி செங்கோட்டையன் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

source:   dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்