யூடியூப் பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்! இனி இதை செய்யமுடியாது!
இனி யூடியூப் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் அதிர்ச்சி தகவல்.
ஸ்மார்ட் (Smart TV) டிவியில் யூடியூப் பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, டிவியில் யூடியூப் பார்க்கும்போது வரும் 30 வினாடி விளம்பரங்களை இனி ஸ்கிப் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுநாள் வரை யூடியூப்பில் வீடியோ பார்க்கும்போது உள்ளடக்கத்தை பொறுத்து ஸ்கிப் பட்டன் மூலம் அடுத்தடுத்து இரண்டு 15 வினாடி விளம்பரங்களை காண்பிக்கப்பட்டு வந்தது.
தற்போது அந்த நடைமுறை நிறுத்தப்பட்டு, கூகுள் தவிர்க்க முடியாத 30 வினாடி NON STOP விளம்பரங்களை காண்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய விளம்பரக் கொள்கை அமெரிக்க சந்தையில் YouTube Select உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே.
மற்ற சந்தைகளிலும் இது எப்போது செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. இந்த நடைமுறை நன்றாக வேலை செய்யும் பட்சத்தில் இந்தியாவிற்கும் இதேபோன்ற கொள்கையை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில், 30 வினாடிகள் நீளமான விளம்பரத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், 15 வினாடி விளம்பரங்களைக் பார்த்து வருகிறோம். இது சில நேரங்களில் எரிச்சலூட்டும்.
அப்படியானால், YouTube-இல் அந்த விளம்பரங்களை எவ்வாறு தவிர்க்கலாம்? என்பதை பார்க்கலாம். யூடியூப்பில் நீண்ட விளம்பரங்களைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, அந்நிறுவனத்தின் யூடியூப் பிரீமியம் சந்தாவை வாங்குவதுதான். ஆனால், அதில் எந்தத் தீங்கும் இல்லை, நீங்கள் அதிகம் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
நல்ல விஷயம் என்னவென்றால், உறுப்பினர் சேர்க்கைக்கு நீங்கள் செலுத்தும் சிறிய விலைக்கு பல நன்மைகளைப் பெறுவீர்கள். யூடியூப் பிரீமியம் சந்தாவின் விலை அமெரிக்காவில் $11.9 மற்றும் இந்தியாவில் மாதம் ரூ.129. இதன் மூலம் விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை மக்கள் பார்க்கலாம். இது ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் உட்பட அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.