புது தில்லியில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த பிரத்தியேக விற்பனை சார்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதும், அந்த சந்திப்பில் கூறப்படும் சென்போன் மேக்ஸ் ப்ரோ ஆனது ஒரு ஸ்னாப்டிராகன் 636 SoC கொண்டு இயங்கும் என்றும் ப்ளிப்கார்ட் குறிப்பிட்டுள்ளது. எனினும், டிஸ்பிளே அளவு, ரெசல்யூஷன், திரை விகிதம் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள்; கேரா சென்சார்கள், பேட்டரி திறன் மற்றும் இயக்க முறைமை பற்றிய எந்தவொரு வார்த்தைகளும் இல்லை.ஏப்ரல் 23, சரியாக மதியம் 12 மணிக்கு தொடங்கும் இந்த எக்ஸ்க்ளூஸிவ் விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்போன் மேக்ஸ் ப்ரோ வாங்குவதற்கு கிடைக்கும். இது சென்போன் மேக்ஸ் ப்ரோவின் உலகளாவிய அறிமுகப்படுத்தல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
சென்போன் மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்த பிரத்யேக விற்பனையானது அசுஸ் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கும் நடந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஆகும். வரவிருக்கும் நாட்களில், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து நுகர்வோர் விருப்பங்களை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளது. அந்த தயாரிப்புகள் இந்திய சந்தைக்கு ஏற்றவாறு கூடுதல் கவனம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கையெழுத்து இடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி (MoU) இந்த இரு நிறுவனங்களும் அசுஸ் சென்போன் மாடல்களுக்கான மார்க்கெட்டிங் நடவடிக்கைகள் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துவதில் பரந்த அளவிலான ஆதரவை பரிமாறியும் கொள்ள உள்ளன.