‘மொபைல் எண்களுக்கு தனி கட்டணம்’ ! முழுக்க முழுக்க வதந்தியே ..!
டிராய்: மொபைல் எண்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என பரவி செய்தி உண்மையல்ல என ட்ராய் தெரிவித்துள்ளது.
நாம் உபயோகித்து கொண்டிருக்கும் சிம்கார்டுகளுக்கு மாதம் அல்லது வருடம்தோறும் கட்டணம் கட்டி வருவது போல, நாம் உபயோகிக்கும் மொபைல் என்னிக்கும் தனிப்பட்ட முறையில் கட்டணம் கட்ட வேண்டும் என்று டிராய், இந்தியா அரசுக்கு பரிந்துரை செய்ததாக ஒரு செய்தி பரவலாக இணையத்தில் பரவி வந்தது.
இதன் காரணமாக, மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வந்தனர். இந்நிலையில், இது போன்று மொபைல் எண்ணிற்கும் தனியாக கட்டணம் கட்ட வேண்டும் என்று மக்களிடையே பரவி வந்த செய்தி முற்றிலும் பொய்யானது என மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் (TRAI) அவர்களது X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரபூர்வ (TN Fact Check) க்ஸ் தளத்திலும், மக்களிடையே பரவி வந்த இந்த செய்தியானது முற்றிலும் பொய்யானது என விளமளிக்கும் ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளனர். இதனால் மக்களும் இந்த செய்தியின் மூலம் சற்று மனநிம்மதி அடைந்துள்ளனர்.
‘மொபைல் எண்களுக்கு தனி கட்டணம்’ என்பது வதந்தியே
Fact checked by FCU | @CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/bg1a88BETE
— TN Fact Check (@tn_factcheck) June 14, 2024
The speculation that TRAI intends to impose charges on customers for holding multiple SIMs/ numbering resources is unequivocally false. Such claims are unfounded and serve only to mislead the public.
— TRAI (@TRAI) June 14, 2024