சுயமாக சிந்திக்கும் ரோபோக்கள் : அமெரிக்க உளவுத்துறை அதிரடி..!
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ (CIA)-வில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட Artificial intelligence ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது. மேலும் இப்போது உள்ள சில ரோபோ மாடல்களில் மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை என்பது இல்லாத ஒரு விஷயமாக உள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பில் பணியமர்த்தப்பட உள்ள ரோபோக்கள் Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இந்த ரோபோ மாடல்கள் தானாக சிந்திக்கும் திறமையைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு செயற்கை அறிவுத்திறன் என்பது கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியனவற்றை வைத்துக்கொண்டு நுண் அறிவை உருவக்குகின்ற முறை ஆகும். மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். இத்துறை மனிதர்களின் முக்கிய பண்பாண அறிவை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவு எப்படி தொழிற்படுகிறது என்பதை துல்லியமாக அறிந்து, விபரித்து, இயந்திரங்களில் செயல்படுத்தப்படுகிறது.
அமெரிக்க உளவு அமைப்பு பணியில் இருப்பவர்கள் சிலர் தினசரி நடக்கும் விடயங்களின் வீடியோக்களை ஆராய்வது மற்றும் சி.சி டிவி கேமராக்கள் மூலம் பதிவாகும் வீடியோக்களில் குற்றவாளிகளை கண்டறிவது போன்ற வேலை செய்வதுண்டு. தற்சமயம் இவர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் செய்ய உள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பின் அறிவியல் குழு துணை இயக்குநர் டான் மேவ்ரிக்ஸ் தெரிவித்தது என்னவென்றால் ஏற்கனவே தினசரி நடக்கும் விடயங்களின் வீடியோக்களை ஆராய்வது போன்ற பணியில் இருந்த அதிகாரிகள், மறைந்து வாழும் உளவாளி வேலைகளை மட்டுமே இனி செய்வார்கள். மற்றபடி அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
தானாக சிந்திக்கும் திறமைக் கொண்ட ரோபோக்கள் விரைவில் இன்னும் சில மாதங்களில் உருவாக்கப்படும் என சிஐஏ தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்பின்பு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு இந்த வருடத்தில் இறுதிக்குள் இந்த ரோபோக்கள் பணியில் அமர்த்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ம